பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தொட்டனைத்துறும் மணற்கேணி தூதுவளைக் கீரை மகாராஜாவுக்கு ரொம்பப் பிடிக்கும் எனக் கேள்விப்பட்டார். தினமும் தூதுவளைக் கீரையைக் கொண்டு வந்து பின்பக்கமாகச் சமையல் காரன் கிட்டே ஒரு 'கத்தையைக் கொடுத்துவிட்டுப் போய் விடுவார். தினம் சமையல் பண்ணிவைப்பான். ஆளவந்தாருக்கு ரொம்பச் சந்தோஷம். தினமும் தூதுவளைக் கீரை கிடைக்கிறது. மகாராஜாவுக்குக் கிடைக்காதா என்ன? ஆனால் தினம் தூதுவளைக் கீரை வேணும்னு மகாராஜா யார் கிட்டே போய்ச் சொல்ல முடியும்? நாம் என்றால் யார் கிட்ட வேண்டுமானாலும் சொல்லலாம். மேலே போகப்போக ரொம்பப் பரிதாபமான நிலை தான் வரும். Uneasy lies the head that wears the crown argårms சொல்வாரே ஷேக்ஸ்பியர். அதுமாதிரி; சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது. கிடைத்தது; சாப்பிட்டுக்கிட்டே இருந்தார். ஒரு மாதம் கொடுத்தார். அப்புறம் அதை நிறுத்திவிட்டார். அன்றைக்குச் சாப் பிடுகிற போது எங்கேடா துதுவளைக் கீரை என்றார். 'இல்லீங்க... ஏன் என்றால் யாரோ ஒருவன் - ஒரு கிழவன் தினம் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போவான். இன்றைக்கு அவன் கொண்டுவந்து கொடுக்கலிங்க' என்றான். 'சரி நாளைக்கு வரும் என்று பார்த்தார். நாளை மறுநாள் வரும் என்று பார்த்தார். நான்கு நாள் ஆச்சு. வரவே இல்லை.