பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 15 ராஜாவுக்குத் தூதுவளை மேலே ஒரு விதமான வெறி உண்டாகிவிட்டது. போய்ப் பிடிடா அந்தக் கிழவனை எங்கிருந்தாலும் என்றார். - சரி என்று, தேடிப்பிடித்துக் கிழவனைக் கொண்டு வந்தார்கள். ராஜாகிட்டே நிறுத்தினார்கள். 'நீ தான் தூதுவளைக் கீரை கொடுத்தாயா?" என்றார். ஆமாம் நான்தான் கொண்டு வந்து கொடுத்தேன். 'ஏன்?” “உங்க தாத்தா ஒரு பொக்கிஷம் வைத்திருக்கிறார். அதை உங்களிடம் காட்ட வேண்டும் என்று சொன்னாரு. எப்படி மகாராஜாகிட்டே வந்து சொல்வது? என்னை விடுவானா, என் கோலத்தைப் பார்த்து. பார்த்தேன். இதுமாதிரி தூதுவளை கொடுத்து கிட்டு இருந்தேன்.” இப்போ ராஜாவுக்குப் பொக்கிஷம் என்றவுடன் ஆசை உண்டாயிற்று. இன்னும் கொஞ்சம் ராஜ்யத்தைப் பெருக்கலாம் என்று எண்ணினார். அப்படியா எங்கே இருக்கு?'... 'அங்கே நம்ம இரண்டு பேர்தான் போக முடியும். நான் தான் காட்ட முடியும். இந்த மாதிரி ராஜா தடபுடலா வந்தால் கஷ்டம்.” * 'பொக்கிஷத்தை வேறு ஒருவன் திருடிக்கிட்டுப் போய் விட்டானா? பங்கு கேட்டானா? ' என்றார். எனவே எல்லாரையும் விட்டுட்டு ராஜா மணக்கால் நம்பியோடே புறப்பட்டார். இப்படிப் புறப்பட்டு பூரீரங்கம் வரணும். வரும்போது அங்கங்கே தங்கித்