பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 17 எல்லாம் பாடிக் கொண்டிருந்தார். ஒன்றும் குறைச்சல் இல்லை. பாண்டிச்சேரி போனார். இறைவன் என்று சொல் லுங்கள் அல்லது இயற்கை என்று சொல்லுங்கள். எனக்கு ஒன்றும் தடை கிடையாது. அங்கே ஒரு பைத்தியம். ஊரிலே உண்டான குப்பை எல்லாம் தூக்கி, துப்பட்டிக்குள்ளே போட்டுக்கிட்டு, ஊரெல்லாம் சுத்தி வரும். எல்லாரும் பைத்தியம் பைத்தியம் என்பார்கள். கொஞ்ச நாள் கழித்துப் பாரதி தற்செயலாக அவ ருடைய கண்ணைப் பார்த்துவிட்டார். அட, தெய்வமே! இவர் பைத்தியம் இல்லை என்று உணர்ந்தார். அவர் இவரைப் பின்தொடர்ந்து கொண்டே இருந்தார். இவர் தவிர்த்துக் கொண்டே இருந்தார். ஒரு நாள் மணக்குள விநாயகர் கோவில் தெருவிலே போய் அவருடைய காலைப் பிடித்துக் கொண்டு எனக்கு வழி காட்டவேண்டும் என்றார். 'என்னடா வேணும்னு' கேட்டார் அவர். ஊரில் இருக்கிற குப்பை யெல்லாம் ஏன் சுமக்கிறீர்” என்று கேட்டார் பாரதியார். 'மடையா மடையா நான் வெளியில் சுமக்கிறேன். நீ உள்ளே சுமக்கிறாய் என்றார். அவ்வளவுதான் உபதேசம். 'ஓம் நமச்சிவாய' இல்லை. நமோ நாராயணாய இல்லை. அந்த உபதேசம் என்பது எப்படி வரும் என்ற கவலையே கிடையாது அவங்களுக்கு