பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தொட்டனைத்துறும் மணற்கேணி சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருளொன்றும் அறிந்திலனே என்று பாடுவார் அருணகிரிநாதர். என்ன உபதேசம் பண்ணினானாம்...? "சும்மா இரு சொல்லற" என்றானாம். "சும்மா இரு என்றதாலே 'மெளனமாக இரு' என்று அர்த்தம் பண்ணிட்டாங்க. அப்படியென்றால் பைத்திய மெல்லாம் மோட்சத்துக்குப் போயிடும் - அதாவது ஊமையெல்லாம் மோட்சத்துக்குப் போயிடும். அயோக் கியத்தனம் பண்ணுவோம்னு தெரியும் அருணகிரி நாதருக்கு - "சும்மா இரு என்று மட்டும் சொல்லாமே, "சும்மா இரு சொல்லற என்றானாம். அதாவது சொல்லற்றுப் போவது. எண்ணம் என்பது எப்படி வருது? சொற்களால் வெளிவருகிறது. நாம் சொற்களால் நினைக்கிறோம். சொற்கள் இல்லேன்னா எண்ணமே கிடையாது. அதைத்தான் புத்தன் சொன்னான் - 'எண்ணங்கள் தூய்மை அடையட்டும்' என்று. . தம்ம பதத்தின் தொடக்கத்திலே நாலாவது வரியே இதுதான். எண்ணங்கள் என்றும் இருப்பவை. எண் ணங்கள் சொற்களின் மூலமாக வருகின்றன. எண்ணங்கள் தூய்மையானால் சொல் சுத்தமாக வரும். நம்மவர்கள் அதைத்தான் சொன்னார்கள். 'சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருளொன்றும்