பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 19 அறிந்திலனே' என்று அதனை அருணகிரிநாதப் பெருமான் அநுபவித்துப் பாடுகிறார். அருணகிரிநாதருக்கு 300 வருஷம் கழித்து வருகிறார் தாயுமானவர். அருணகிரிநாதர் போய் 650 ஆண்டுகள் ஆகிவிட்டன. தாயுமானவர் 250 ஆண்டுகள் கூட ஆகவில்லை. நினைத்துப் பார்க்கிறார். ஐயா அருணகிரியப்பா உனைப்போல மெய்யாக ஒரு சொல் விளம்பினவர் யார் (தாயு. உடல் பொய்யுறவு) ஒரு சொல் - என்ன சொல்லு? சொல் அற' என்று சொன் னாரே. ஐயா அருணகிரியப்பா உனைப்போல மெய்யாக ஒரு சொல் விளம்பினவர் யார்? ஆக, ஒரு ஞானியை இன்னொரு ஞானிதான் போற்றிப் பாராட்ட முடியும். எத்தனையோ பாடியிருக்கிறார் அருணகிரியார். அத்தனையும் விட்டுவிட்டு இந்த ஒரு சொல்லைப் பிடித்துக்கொண்டார் தாயுமானவர். உனைப் போல ஒருசொல். அதுவும் மெய்யாக விளம்பினவர் யார்? ஏன்னா, அனுபவத்தால் கிடைத்தது. அருணகிரியாருக்கு எப்படிக் கிடைத்தது? அது எங்கேயோ இருக்கிறது. எவனோ ஒருத்தன் வருகிறான். இவனுக்குத் தெரியாது. ஆனால் அவனுக்குத் தெரியும். எப்போது வரணும், யார் கிட்டே வரணும்; என்ன சொல்லணும்? எல்லாம் அவனுக்குத் தெரியும். ஆனால், இவனுக்குத் தெரியாது, எந்த வாத்தியார் வரப்போகிறார் என்று. -