பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O தொட்டனைத்துறும் மணற்கேணி வருபவர்கள் சில சமயங்களிலே விஸ்தாரமாக உபதேசம் பண்றாங்க. சில சமயங்களிலே ஒரு சொல் சொல்றாங்க. சில சமயங்களிலே அதுவும் இல்லை. கண்ணாலே பார்த்துவிட்டுப் போய்விடுகிறார்கள். நயன தீrை என்று பெயர். சில சமயங்களிலே காலாலே உதைக்கிறாங்கள். திருவடி தீகைr என்று பெயர். சில சமயங்களிலே இப்படித் தொடறாங்க. அது ஸ்பரிச தீrை என்று பெயர். எந்த தீrை பண்ணினால் உனக்கு நியூரான்கள் திறக்குமோ, உள் உணர்வு வெளிப்படுமோ அது அவர்க ளுக்குத் தெரியும். அதைத் தெரிந்து செய்கிறாங்க. ஆகவே, கற்றனைத்துறும் கற்றல்' என்றவுடன் நாம் என்ன தப்புச் செய்து விட்டோம். புத்தகத்தைப் படிப்பது மட்டும் என்று கருதி விட்டோம். அது சரியன்று. புஸ்தகத்தைப் படிக்கிறதும் கல்விதான்; எவனையோ கேக்கிறதும் கல்விதான்; நாலு பேரோடே கலந்துரை யாடுவதும் கல்விதான். ஒண்ணுமே இல்லை. ரமணர் கிட்ட போனால் ஒண்ணும் சொல்ல மாட்டார். ஒரு மூலையில் அமைதியாக உட்காரணும். - பல பேருக்குப் பைத்தியம் பிடித்துடும். - காரணம் பக்குவமில்லாத வற்குப் பைத்தியம் தான் பிடிக்கும். அந்த நான் யார்? (Who am l) என்கிற கேள்வி ஒண்ணுதான். 'கல்வி என்பது ஏட்டுக் கல்வி, காதால் கேட்கிற கல்வி, பிறரோடு பேசுகின்ற கல்வி, சிந்திக்கின்ற கல்வி எல்லாமே கல்விதான். கல் என்றால் என்ன? தோண்டுதல்