பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 21 என்று அர்த்தம். தோண்டுகிறது - புத்தகத்தைத் தோண்டி னாலும் சரி - கண்ணை மூடிக் கொண்டு உள்ளே தோண்டிக் கொண்டாலும் சரி. முடிஞ்சவர்கள் உள்ளே தோண்டுங்க - முடியாதவர்கள் வெளியே தோண்டுங்க. ஆக மொத்தம் தொட்டனைத் துாறும் அறிவு. அது ஒன்றும் புதியதாக வந்து தொப் பென்று குதித்து விடவில்லை. அது உள்ளே இருக்கிறது. யாராவது ஒருவர் வந்து கதவுகளைத் திறக்க வேண்டும். (It is there within Somebody is required to open the gates.) - அப்போது ஊற ஆரம்பிச்சுடும். எவ்வளவு ஊறும்? ....அங்கேதான் நம்ம ராசி. சிலபேருக்கு நீங்க நம்பவே மாட்டீங்க. என்னுடைய வாழ்க்கையிலே எவ்வளவோ மகான்களை நான் சந்திச்சிருக்கிறேன். சொல்லவே முடியாது. யோக சுவாமிகள் என்று ஒரு பெரிய மகான் இலங்கையிலே நான் இரண்டு சொற்பொழிவு செய்தேன். espairsprougj Q&T's Gungslajidi, vocal chord failure. ENT Specialist டாக்டர் ஒருத்தர் இருக்கிறார். ஒய்வு பெற்றவர். அவர் வீட்டுக்குக் காரை நானே ஒட்டிக் கொண்டு போய், கையைத் தட்டிக் கூப்பிட்டு, இது மாதிரி ஆய்விட்டது என்று எழுதிக் காட்டினேன். கொழும்புக்குப் போய்ப் பார்க்கலாம். நான் ஆளை அனுப்புகிறேன். ஏற்பாடு பண்றேன் என்றெல்லாம் சொன்னார். வெளியே வந்து காரை ஸ்டார்ட் பண்றேன். 'என் பிழைப்போ வாய்ப்