பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தொட்டனைத்துறும் மணற்கேணி பேச்சில் தான் - அது போயிருச்சு, ' என்று அஞ்சியவனை அப்போது அந்த டாக்டர் நீங்கள் யோக சுவாமிகள் சீடரல்லவா? அவரைப் பார்த்து போட்டுப் போகலா மல்லவோ?’ என்றார். அதுவரைக்கும் நான் நினைக்கக் கூட இல்லை. அப்புறம் போனேன். அவர் கண்ட படி பேசுவார். கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லித் திட்டுவார். பேச்சோடு பேச்சாகச் சொன்னார்: "சேக்கிழாரையும் கம்பனையும் வெட்டித் தானே புதைக்கணும். நாங்கள் தானே புதைக்கணும். பொடியன் போ!' என்றார். அவ் வளவுதான். 'சரி உத்தரவு' என்ற வார்த்தை என் வாயில் வந்தது. விழுந்து கும்பிட்டேன். வரும்போது 'டாக்டர்’ என்று நடு ரோட்டிலே இருந்து கத்தினேன் அப்போது எனக்கு 40 வயது கூட இல்லை. டாக்டர் 70 வயதானவர். தடால் என்று விழுந்து கும்பிட்டார். "அவர் (யோகசாமி) ஒருத்தர் தான் இது செய்ய முடியும். கொழும்புக்கு அனுப்பிப் பார்க்க வேண்டியதில்லை. சிலருக்கு vocal chord failure oudjuh. No treatment for that.” Gang;3. சரிப்படுத்துகிற அளவுக்குச் சித்தர்கள் இருக்கிறார்கள். ஆகமொத்தம் தொட்டனைத்துறும் என்றால் நான் தோண்ட வில்லை. ஆகவே எனக்கு ஊற வில்லை. நான் தோண்ட வில்லை என்று நினைக்கும்போது, மணற் கேணியில்லை. பாறாங்கல் கேணியாக இருக்கு. தொட்டனைத்து ஊறும் அறிவு - அறிவு என்ற சொல்லை மறந்திடாதீங்க. வள்ளுவரைப் பொறுத்த மட்டிலே அறிவு, உணர்வு, பண்பு எல்லாம் ஒருபொருட் சொற்கள். மாறி மாறி உபயோகப்படுத்துவார்.