பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 23 பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றாக் கடை அறிவினால் ஆகுவதுண்டோ என்பார். அறிவு என்றால் intellect என்று அர்த்தம் பண்ணி விட்டால் இடர்ப்பட நேரிடும். அங்கே intellect என்ற பொருள் இல்லை. 'நீ அன்புடையவனாக, பண்புடையவனாக... இருந்தால் இன்னொருத்தர் நோயைப் பார்த்துக் கையெழுத்துப் போட்டுப் புண்ணியமில்லை. நீ பங்கிட்டுக்கணும். அது எப்படிடா முடியும்? அவனுக்கு வயிற்று வலின்னா, வலியைப் பங்கிட்டுக்கணும் என்று அர்த்தமில்லை. பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றுதல் என்றால், பங்கிடுதல் என்று அர்த்தமில்லை. அவனுக்கு வயிற்று வலிவந்தால் அவன் எப்படித் துன்பப்படுகிறானோ அது மாதிரி நீயும்... அவன் சாப்பிடாமல் இருந்தால் நீயும் கிட உண்மையான காதல் பற்றிச் சாதல், நோதல், பிரிவினை நோதல் என்றெல்லாம் இலக்கணக்காரன் சொல்வான். - இதுதான் உண்மையான நட்பு. அது ஏறிட்டுக்கொண்டு நாம் அனுபவிப்பது. அறிவினால் ஆகுவதுண்டோ? இது அறிவினால் செய்கிற காரியம் இல்லே. பண்பினாலே செய்வதாகும். ஆகவே, திருவள்ளுவரைப் பொறுத்தமட்டில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். -