பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 31 திருவாவடுதுறை மடத்தில் இருந்தவர். அங்கே இருந்தவர்கள் என்ன நினைச்சாங்களோ அவரைத் திருநெல்வேலி ஜில்லாவில் குற்றாலம் போற வழியிலே ஒரு இடம் இருக்கிறது. அங்கே போயா என்று அனுப் பிட்டார்கள். தொல்லை கொடுக்காம இருக்கணுங்கறத் துக்குத் தான் இந்தக் கதை. அங்கே உட்கார்ந்து கொண்டு தான் ஆராய்ச்சி பண்ணினார். எப்படி இவருக்குத் தோணுச்சி என்று தெரியலை. ஐந்து பொறிகளைப் பங்கு பிரிச்சார். சென்று பற்றும் பொறி. நின்று பற்றும் பொறி என்று. காது சென்று பற்றலை. அந்த ஒலி காதில் வந்து விழுந்து என்னை பற்றுது. இனிப்பு இருக்கிறது. வாயில் பட்டால் தான் சுவைக்கிறது. சத்தம் காதில் விழனும். காற்றோ அல்லது வேறு ஏதோ மேலே படனும். இவை எல்லாமே நின்று பற்றும் பொறிகள் - மெய், வாய், மூக்கு, செவி. கண்ணைப் பிரிச்சார். அது சென்று பற்றும் பொறி என்றார். ஸார், அதையெல்லாம் பார்க்கக் கூடாது ஸ்ார். அது என்னத்துக்கு அடுத்த வீட்டுச் சமாசாரம் - பார்க்கிறோமா இல்லையா? இந்தக் கண் இருக்குதே - இது சென்று பற்றும் பொறி. இதை உணர்ந்தான் கம்ப நாடன். - . r மற்றப் பொறிகள் தொல்லை கொடுக்கிறதை விட இந்தக் கண் அதிகமாக தொல்லை கொடுக்கும். அதிகமானத் தொல்லை கொடுக்கிறது மட்டும் இல்லே. மற்றப் பொறிகளில்ஏதாவது வந்து விழுந்தால்தான் தொல்லை கொடுக்கும். இது தொல்லையைத் தேடிக் கிட்டுப் போகும். ஆகவே பிரித்தார் -