பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தொட்டனைத்துறும் மணற்கேணி அந்த அதிர்வு இருந்துக்கிட்டே இருக்கும், எப்ப நீங்க தட்டினாலும். அதே மாதிரி கம்பன், ஆழ்வார்கள் போன்றவரிடத்தில் இருக்கிறது. குமரகுருபரர் பார்த்தீர்கள் என்றால் நானூறு வருடம்கூட ஆகாது; சாரி 300 வருடம்தான். அந்தக் கதையைப் பார்த்தீர்கள் என்றால், ரொம்ப நாளாப் பிள்ளை இல்லை. அப்புறம் பிள்ளை பொறந்தது. ஊமை. டாக்டர்கிட்டே போகலை. அதைக் கொண்டு போயித் திருச்செந்தூரிலே சாமி சந்நிதானத்திலே போட்டுட்டாங்க. 'யோவ். பிள்ளை கேட்டேன். பிள்ளை கொடுத்தே. ஆனால் ஊமையாயிருக்குது. நீயே பார்' என்றார்கள். அது திருச்செந்தூர் முருகனைப் பற்றியே பாட ஆரம்பிச்சுதாம். "பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு நாதமும்நாதாந்த முடிவும் நவைதீர்ந்த போதமும் காணாத போதமாய்..." - (குமர.கந்தர்கலி.கண்ணி 1,2) முதல் நாலு வரியையே விளக்கிப் பெரிய புத்தக மாகவே எழுதலாம். எப்படி வருகிறது? வரலாற்று உண்மை; வெறும் கற்பனையில்லே. நடக்கலேன்னு சொல்ல முடியாது. திருமலை நாயக்கர் காலத்தில் இருந்தவர். அரண்மனைக்