பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தொட்டனைத்துறும் மணற்கேணி றோம் - Bible படிச்ச எத்தனையோ பேர் நினைச்சிருக் காங்க. எல்லாருக்கும் தெரியும். ஆனால் வெளிப்படுத்த (plquojiabama). There was one Milton who had the same dream as others on reading the Bible and could express himself. Simply because he was able to express himself, he became glorious. அது போல 63 நாயன்மார் வரலாறு சேக்கிழார் மட்டுமா பார்த்தாரு. எத்தனையோ பேர் பார்த்தாங்க. ஆனால் சேக்கிழார்தான் அதைப் பாட முடிந்தது. ஏன்? அந்தத் தகுதி அவர்கிட்டேமட்டுந்தான் இருந்தது. மற்ற வர்கள் அவங்க வரலாற்றைக் கேட்டாங்க, பார்த்தாங்க - சரி. - மெய்ப்பொருள் என்றால் என்ன? ஒருத்தர் வேஷ்டி தோச்சுக் கொடுத்தாரு - ஒருத்தர் சட்டி செஞ்சு கொடுத் தாரு. - இதிலே எல்லாம் பொதுத்தன்மை என்ன இருக்குது? இவர் அந்தத் தொண்டைப் பண்ணினாரு - இந்தத் தொண்டை பண்ணினாரு. சேக்கிழார் ஒருத்தர்தான் அவங்க வரலாறிலே ஒரு பொதுத் தன்மை இருக்கு துன்னு கண்டாரு. முன்னாடி படிச்சவங்க யாரும் பொதுத்தன்மையை நினைக்கலே. அதனால்தான் திருத்தொண்டர் புராணம் காப்பியமே இல்லேன்னு 19ஆம் நூற்றாண்டிலே எழுதிப்புட்டாங்க.