பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 79 நான் அக்கருத்தைத் தகர்த்தேன். 'ஐயா திருத்தொண்டர் புராணம் காப்பியம். காப்பியத்துக்கு ஊடு பொருள் ஒண்ணே ஒண்ணுதான் இருக்கணும். இப்போ என்ன ஊடு பொருள் தொண்டுதான் ஊடு பொருள். தொண்டு மனப்பான்மையைத் தான் சொல்ல வருகிறார் சேக்கிழார். இங்கே இவன் 'சைவம்' என்று சொல்லிவிட்டதனாலே பட்டையும் கொட்டையும் தான் பெரிய புராணம்னு நினைச்சுட்டான். பட்டையும் கொட்டையும் இதில் பங்கு பெறுவதில்லை. அடிப்படை என்னான்னா தொண்டு செய்வதுதான். மக்கள் தொண்டு - அதைச் செய்கிறவர் அடியார். சிலம்பு என்பது எப்படிக் காப்பியப் பொருளாயிற்றோ அப்படி இப்போ ‘தொண்டு என்பது காப்பியப் பொருளா ஆக்கிட்டீங்கன்னா. இந்த அடியார் இந்தத் தொண்டு பண்ணினார், அந்த அடியார் அந்தத் தொண்டு பண்ணினார், இவன் பிள்ளை அறுத்துக் கொடுத்தான், அதையும் தொண்டாகத்தான். வருகிறவனுடைய வேஷ்டியை வாங்கி, தோச்சு, காயவைத்துக் கொடுத்தான். இவனும் தொண்டு பண்ணினான். அது எப்படி சார், பிள்ளையை அறுத்துக் கொடுத் தவனும், வேட்டியைத் தோச்சுக் கொடுத்தவனும் ஒண்ணாக முடியும்? நாம் இரண்டையும் வித்தியாசமாக நினைக்கிறோம். பிள்ளையை அறுத்துக் கொடுத்தான்னா, அடேயப்பா