பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தொட்டனைத்துறும் மணற்கேணி என்கிறோம். வேட்டியைத் தோச்சுக் கொடுத்தான்னா, இது என்ன பிரமாதம் என நினைக்கிறோம். சேக்கிழார் பார்த்தார். பிள்ளையை அறுத்துக் கொடுத்த மனநிலை வேட்டியைத் தோச்சுக் கொடுத்த மனநிலை. இரண்டும் தொண்டு மனப்பான்மை கொண்டவை. ஏற்றுக் கொள் என்கிறார். ஆகவே இந்த மெய்ப்பொருளைக் காண முடிகிறது, அவராலே. 'தொண்டர் பெருமை என வருகிறபோது அவராலே தான் பெரிய புராணத்தைப் பாட முடிஞ்சது. சேக்கிழார் தெய்வீக அருள் பெற்றிருந்தார். அதனாலே அவரால் பாட முடிந்தது. - அடிப்படைப் பொருளை அதாவது மணி, முத்து, பவழம் எல்லாம் கோத்த மாலையிலே உள்ளே இருக்கிற நூலைப் பார்க்கிறது இல்லே; அவரால் பார்க்க முடிந்தது. "மெய்ப்பொருள் காண்பது அறிவு எனச் சொல்லும் போது அந்த அறிவு என்பதற்கு உணர்வு என்று இருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும். அந்த உணர்வினையே உள் உணர்வு என்று சொல்லுவார்கள் - இன்ட்யூஷன்; அது அவருக்கு இருந்தது. திருமூலர் இதையே சொல்லிவிட்டுப் போய் விட்டார். - நடமாடக் கோவில் நம்பர்க் கொன்றியில் படமாடக் கோயிற் பகவற்க தாமே. (திருமூ:7:142:1)