பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 81 இப்ப நீங்க பார்க்கலாம். பழனிக்கு நீங்கள் போயிருந்தீர்களானால் இரண்டு மூன்று பேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பாங்க. எல்லாம் பெரிய இடத்துச் சமாசாரம். சார் நூறு குடம் அபிஷேகம் பண்ணினேன். ' என்பார் ஒருவர். அடுத்த வருஷம் மற்றொருவர் 101 குடம் பண்ணுவார். 'முருகான்னு அவர் 100 குடம் பண்ணினேன்னு சொன்னாரில்லே அன்றைக்கே முடிவு பண்ணினேன். 101 குடம் நான் பண்ணறேன்னு. இவன் முருகனுக்கா அபிஷேகம் பண்ணினான்? தன் அகங்காரத்துக்கு அபிஷேகம் பண்ணினான். அகங்காரத் துக்கு அபிஷேகம் பண்ணிட்டு, முருகன் தலையிலே கொட்டினான். முருகன் சிரிக்கிறான். இதைப் பார்க்கிறார் ஓர் அடியார். இந்த மாதிரித் 'திருவிளையாடல் அன்றைக்கே இருந்திருக்கிறது. அவங்க இரண்டு பேரும் 100, 101 எனப் போட்டி போட்டுக்கொண்டு ஆக்கிறபோது இவரு 103 ஆக்கு கிறார். அவரு பார்த்தாரு அடே மூணு திருட்டுப் பசங்களா? முருகன் சிரிக்கிறான். இதெல்லாம் கேக்கலே. பின்னே என்ன கேட்கிறான் தெரியுமான்னாரு. 'என் பாவம் ஆறு கடல் ஏழிருந்தும் என்ன பாவம்டா ஆறு, ஏழில் இருந்தும், கடல் ஏழில் இருந்தும் தீர்த்தம் கொண்டு வந்து வைத்திருக்கிறார் அபிஷேகத்திற்கு. அம்பிகை பார்த்தாள். சிரிக்கிறாளாம் அம்பிகை. வெல்லப் பிள்ளையாரைப் பின்னே கிள்ளி நிவேதனம்