பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தொட்டனைத்துறும் மணற்கேணி செய்து பிள்ளையார் பூஜை பண்ணினாள். நிவேதனத் திற்கு ஒன்றும் இல்லே. அதான் வெல்லம் ஆயிற்றே. பின்னே கிள்ளி நிவேதனம் பண்ணினாளாம். அது மாதிரி இவன் என்ன சொந்தமாகப் பண்ணினான்? 'நான் படைச்சுதடா இந்த ஆறு. நான் படைச்சுதடா இந்தக் கடல். அதைக் கொண்டு வந்து என் தலையில் ஊத்துறயே. நான் படைச்சது என்று ஒன்றுமில்லையோ? 'இருக்கிறதடா? என்பாவம் ஆறுகடல் ஏழிருந்தும் என் அம்மை அன்பாளர் கண்ணருவி ஆடுவது திருவுள்ளம் 'உன் கண்ணிலே ஊறது பாருடா இரண்டு சொட்டுத் தண்ணி. அதுக்கு ஏங்கி இருக்குறாடா அம்பிகை’ ஆக, உள் உள்ளம் உருகிக் கண்ணிர் வருமானால், அதுக்குத்தான் அவள் ஏங்கி இருக்கிறாளே தவிர நீ கொட்டுகிற தண்ணியிலே மகிழ்வதில்லை. இதைப் பார்க்கிறார் திருமூலர். அவர் சித்தர். அவர் எப்போதும் குறுக்கு வழியிலே போவார். நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றியில் (திருமூ:7:142:1) நடமாடுகிற மனிதர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு ஒன்று கொடுத்தால் படமாடக் கோயிற் பகவற்க தாமே