பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

மலையின் மீதிருந்த வண்ணம் நாற்புறமும் உள்ள காட்சிகளைக் கண்டு மகிழ்கின்றோம். திவ்விய தேசயாத்திரையின் பலன்க ளெல்லாம் கைவந்து விட்டதாக நம்மனம் புளகாங்கிதம் அடைகின்றது. இந்நிலையில் மலையிலிருந்து கீழே இறங்கு கின்றோம்.

அடிவாரத்தில் சக்கரவர்த்தி திருமகன் சந்நிதியும் உள்ளது. இந்த எம்பெருமானையும் ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்

G

“மாலுங்கட லாரம லைக்குவடிட்

டணைகட்டி வரம்புரு வமதிசேர் கோலமத ளாயஇ லங்கைகெடப்

படைதொட்டொரு கால்அம ரில்அதிர காலமிது என்றுஅயன் வாளியினால்

கதிர்நீளமுடி பத்தும் அறுத்தமரும் நீலமுகில் வண்ணன்.எ மக்கிறைவற்கு

இடம்மாமலை யாவது நீர்மலையே.”

(மாலும்-பெரிய, மலைக்குவடு-கொடுமுடிகள்; மதிசேர்-சந்திரமண்டலம் வரையில்; கோலம்-அழகிய அயன்-நான்முகன், வாளி-அம்பு) என்பது பாசுரம். இதனை அவன் சந்நிதியில் மிடற்றொலியிட்டு அநுசந்திக்கின்றோம்.

சக்கரவர்த்தி திருமகன் சந்நிதிக்கு இடப்புறமாக அணிமாமலர் மங்கைத் தாயார் சந்நிதி உள்ளது. இவரையும் நீர்வண்ணனையும் நினைந்தே ‘அணிமாமலர் மங்கையொடன்பளவி’ என்று ஆழ்வார் இத்திவ்விய தேசத்து மங்காளசாசனத்து முதற் பாசுரத்தில் குறிப்பிட்டதை நினைத்து போற்றுகின்றோம். இத்தாயார் சந்நிதியில் இப்பதிகத்துப் பத்துப் பாசுரங்களையும் அநுசந்தித்துக் கரைபுரண்டோடும் பக்தி நிலையைப் பெறுகின் றோம்.

திருக்கோயிலை விட்டுப் புறப்பட்டுவதற்கு முன்பு ஒர் ஒதுக்கிடத்தில் அமர்ந்து ஒய்வு கொள்ளுகின்றோம். நம்மனம் இங்ஙனம் இறையநுபவம் பெறுகின்றது: திருமங்கையாழ்வார் திருநீர்மலை எம்பெருமான்மீது சொல் மாலைகள் தொடுத்துப் போற்றுங்கால் கிருஷ்ணாவதாரம்,’ நரசிம்மாவதாரம்,’

34. பெரி. திரு - 2, 4: 5 35. பெரி. திரு . 2. 4:1,2,3,4,7 36. மேலது 2. 4: 1, 2,4