பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்மலை நீர்வண்ணன் 145

திரிவிக்கிரமாவதாரம், இராமாவதாரம், பரசுராமாவதாரம்,’ பலராமாதாரம்” ஆகிய அவதாரங்கள் எடுத்தபோது எம்பெருமான் செய்தருளின் வீரச்செயல்களையும் வெற்றிச் செயல்களையும், ‘உம்பரும் இவ்வேழுலகும் ஏழ்கடலும் எல்லாம் உண்ட’ செயலையும் உள்குழைந்து போற்றி இனியராவதை அறிகின்றோம். பொதுவாக எல்லா ஆழ்வார் களுமே இங்ஙனம் எம்பெருமானின் வெற்றிச் செயல்களையும் வீரச்செயல்களையும் போற்றுவர் என்பதையும் நினைக்கின் றோம். சில சமயம் ஆழ்வார்கள் தாமான தன்மையை விட்டுப் பிராட்டியின் நிலையை ஏறிட்டுக் கொண்டு அகத்துறை அமைந்த பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்யும் அநுபவத்தையும் சிந்திக்கின்றோம். ஆகவே, எம்பெருமானைப் பற்றியே அகத்துறை, புறத்துறைகள் அமைந்த பாசுரங்களாலனதே ‘நாலாயிர திவ்விய பிரபந்தம்’ என்னும் திருமறையாகும் என்ற பொது உண்மையை நினைந்து பரவசப்படுகின்றோம்.

இந்த அநுபவ நிலையில் திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின்,

‘இரங்கும் உயிரனைத்தும் இன்னருளால் காப்டன் அரங்கன் ஒருவனுமே ஆதல், கரங்களால் போர்மலை வான்வந்த புகழ்வாணன் காட்டினான் நீர்மலைவாழ் எந்தைஎதிர் நின்று’

(இரங்கும்-வருந்துகின்ற; உயிர்கள்-சீவராசிகள்; அருள்-கருணை; வாணன் - பானாசுரன்.) என்ற பாசுரம் நினைவிற்கு வரவே, அதனை மிடற்றொலியாக ஒதி உளங்கரைகின்றோம். வாணனைக் காத்த கண்ணனது கருணை வெள்ளங் கோத்து நம்மீதும் மடை திறந்து பாயும் என்று அசையாத நம்பிக்கையுடன் மனநிறைவு பெறுகின்றோம். இந்த நிலையில் குதிரை வண்டி ஏறி பல்லாவரம் மின் இருப்பூர்தி நிலையத்தை அடைந்து நம் இருப்பிடத்திற்கு ஏகுகின்றோம்.


37. மேலது - 2. 4: 1 38. மேலது - 2. 4: 5 39. மேலது - 2. 4: 6, 40. மேலது - 2. 4: 3 41. மேலது . 2. 4: 6 42. நூற். திருப். அந். - 91

தொ நன-1)