பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஇடஎந்தை எம்பெருமான் 149

அல்லது ஏற்றருளாதிருக்கத் திருவுள்ளமோ? இரண்டிலொன் றைத் தன் சோதிவாய் திறந்து கூற வேண்டுமென்று வேண்டு கின்றார்.

“திவளும்வெண் மதிபோல் திருமுகத்(து) அரிவை

செழுங்கடல் அமுதினில் பிறந்த அவளும்நின் ஆகத்(து) இருப்பது அறிந்தும்,

ஆகிலும் ஆசைவி டாளால்; குவளைஅம் கண்ணி கொல்லிஅம் பாவை

சொல்லு:நின தாள்நயந் திருந்த இவளையுன் மனத்தால் என்நினைந்(து) இருந்தாய்

இடவெந்தை எந்தை பிரானே!”

(திவளும்-பிரகாசிக்கின்ற; மதி-சந்திரன்; திருமுகம்-அழகிய முகம்; அரிவை

இளம் பருவமுள்ளவள்; அவள்-பெரிய பிராட்டியார், ஆகம். மார்பு; குவளை நீலோற்பலம்: பாவை-பதுமை)

என்பது ஆழ்வாரின் பாசுரம்.

உலகில் ஒர் ஆடவன்.ஒரு பெண்ணிடம் அளவற்ற அன்பு வைத்திருப்பதாதக் கண்டால் அவனிடத்தில் மற்றையோர் மையல் கொள்ளலாகாது. அப்படிக் கொள்வது அறிவுடைய செயலன்று. இந்த நியாயத்தைக் காட்டித் திருத்தாயார் திருவிடவெந்தை எம்பெருமானிடம் வினவுகின்றாள்: ‘'இட வெந்தை பிரானே! உன் மீது என் மகள் ஆசை கொள்ளுதல் கூடாது. நீயோ பாற்கடலில் பிறந்த அழகிய திருமகளை ஒரு நொடிப்பொழுதும் விடாது நின்திருமார்பில் வைத்துக் கொண்டு ள்ளாய். இதனை அறிந்திருந்தும் என் மகன் உன்மீது காதல் கொண்டுள்ளாள்; கொண்ட ஆசையைக் கைவிடுகின்றவளாகவும் இல்லை. தன்னுடைய தனிச்சிறப்பினை எண்ணி நீ திருமகளி டத்தில் காட்டும் அன்பை விடதன்னிடத்தில்தான்.அதிக அன்பைக் காட்டுவாய் என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றாள். யார் எது விரும்பினாலும் உனது திருவுள்ளம் உவந்தாலன்றிப் பலன் கிடைக்க மாட்டாதாகையால் என் மகள் விஷயத்தில் நீ என்ன செய்யத் திருவுள்ளங் கொண்டுள்ளாய்? அடியேன் அறியச் சொல்லியிருள்க’ என்று வேண்டுகின்றாள்.

இப்பாசுரத்தின் நயமும் நம் சிந்தையில் எழுகின்றது. சிசுக்களுக்குத் தாயின் முலைபோல அடியவர்கட்கு எம்பெரு

7. பெரி. திரு. 2.7:1.