பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தொண்டைநாட்டுத் திருப்பதிகள்

மானுடைய திருவடியே கதியாதிலின் நின்தாள் நயந்திருந்த இவளை’ என்றார். ‘சொரூப ஞானமில்லாத காரணத்தால் திருமகள் நின் திருமார்பை விரும்பினாள்; என் மகள் நற்குடிப் பிறந்து நல்லறிவு வாய்க்கப் பெற்றவளாதலின் நின் திருவடியையே விரும்புகின்றாள்’ என்ற சமத்காரம் தோன்றப் பேசுகின்றாள் தாய். ‘உன் மனத்தால் என் நினைந் திருந்தாய்?’-இது எல்லா சாத்திரங்களின் பொருளையும் அடக்கிக் கொண்டுள்ள வினாவாகும். சேதநனுடைய செயல் தொகுதிகள் யாவும் பேற்றுக்குச் சாதனம் அன்று, எம்பெருமானுடைய திருவுள்ளத்தில் பிறக்கும் இரக்கமே பலனைப் பெறுவிக்க வல்லது என்ற தொனிப் பொருள் இதில் அடங்கிக் கிடக்கின்றது. இத்தலத்து எம்பெருமான் தமது தேவியை இடப்பக்கத்தில் தாங்கிக் கொண்டிருத்தலால் இத்தலம் ‘திருஇட எந்தை’ (திருவினை இடப்புறத்துக் கொண்டிருக்கும் எந்தை) என்ற திருநாமத்தால் வழங்கி வருகின்றது என்பது ஈண்டு அறியத் தக்கது.

தமிழில் அகப்பொருள் துறைகளில் வரும் செய்திகளை யெல்லாம் பொருத்தி நாயக - நாயகி பாவனையாக வரும் பாசுரங்களைச் சுவை மிக்கதாக்கியுள்ளனர் ஆழ்வார் பெ ருமக்கள். தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிக்கு ஏற்படும் உடல் நிலைகளையெல்லாம் எம்பெருமான்மீது ஆராக்காதல் கொண்டிருக்கும் ஆழ்வார் நாயகிக்கும் ஏற்படுவதாகச் சொல்லுவது கவிமரபாகி விட்டது. அடுத்து வரும் பாசுரங்களி லெல்லாம் இச்செய்திகள் குறிப்பிடப் பெற்றுள் ளதைக் காணலாம். திருத்தாயார் இவ்வாறு பேசுகின்றாள்: ‘திருவிட வெந்தையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே! என் மகள் தோழியரிடம் புன்சிரிப்புக் காட்டிப் பேசுவதில்லை; மார்பில் சந்தனம் பூசிக் கொள்வதில்லை; கண்ணில் மை தீட்டிக் கொள்வ தில்லை; கூந்தலிலும் மணமிக்க மலர்களைச் சூட்டிக் கொள்வ தில்லை. வாய்விட்டு ஏதாவது சொல்ல நேர்ந்தால் ‘அன்று இவ் உலகம் அளந்தாய்! என்பன போன்ற சொற் களையே வாய்வேருவுகின்றாள். தன் மகளின் ஆற்றாமையைக் கண்ட திருத்தாயார் அவளுடைய தாபமெல்லாம் தீரும்படி சில உபசாரங்களைச் செய்திடுகின்றாள். அவை நினைத்ததற்கு நேர்மாறான பலனைத் தருகின்றன. மார்பில் சந்தனத்தைப் பூசி முத்து வடத்தை அணிவித்தாள்; அவை நெருப்பை வாரிக்

8. பெரி. திரு. 2.7:2.