பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஇடஎந்தைஎம்பெருமான் 451

கொட்டினாற்போல் இருக்கின்றன. அவளை நல்ல வெண்ணி லவில் கொண்டு நிறுத்தினாள், நிலவு உடம்பு மேல் பட்டதும் இளைக்கத் தொடங்கிற்று. அவளைக் கடற்கரையருகே இட்டுச் சென்றாள்; கடலொலி காதில் விழத் தொடங்கியதும் கதறத் தொடங்கினாள். மாந்தளிர் போன்ற அவள் மேனியிலும் பொன்முலாம் பூசியது போல் பசலை படர்ந்தது. உடல் ஈர்க்குப் போல் இளைத்து விட்டபடியால் வளையல்களும் கழன்று விழத் தொடங்கின.”

அடுத்து, தன் மகள் வாய்வெருவுதலைக் குறிப்பிடு கின்றாள்:

“ஊழியின் பெரிதால் நாழிகை என்னும்;

ஒண்சுடர் துயின்றதால் என்னும்; ஆழியும் புலம்பும் அன்றிலும் உறங்கா,

தென்றலும் தீயினில் கொடிதுஆம், தோழி! ஓ! என்னும்; துணைமுலை அரக்கும்”

(ஊழி-கல்பம், ஒண்சுடர்-சூரியன்: ஆழி-கடல்; அன்றில்-ஒருவகைப் புள்; அரக்கும் இடத்தைவிட்டுப் பெயர்த்தாள்)

என்பது பாசுரப்பகுதி. தலைவனைப் பிரிந்த தலைவி பேசுவதுபோலவே ஆழ்வார் நாயகியும் பேசுகின்றாள். இரவு கழிக்க முடியாமையைச் சொல்லும்போது, ‘ஒரு நாழிகைப் பொழுதும் ஒரு யுகமாக நீண்டு செல்லுகின்றதே, பகலவன் உறங்கி விட்டானோ?’ என்கிறான். தன் பாங்கியை நோக்கி, ‘'தோழி, கடலும் கேட்போர் செவி கைக்கும்படி கூக்குரலிடு கின்றதே; அன்றில் பறவையும் கண்மூடாமல் கத்துகின்றதே; எல்லோருக்கும் குளிர வீசும் தென்றல் என்மாட்டு நெருப்பை விடக் கொதிக்கின்றதே, ‘’ என்கின்றாள். ‘கொள்ளும் பயனொன்றில்லா கொங்கைதன்னைக் கிழங்கோடும், அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என் அழலைத் தீர்வேனே’ என்று ஆண்டாள் அருளிச் செய்ததுபோல இப்பரகால நாயகியும் தன் இரண்டு முலைகளையும் வேருடன் பிடுங்கி எறிபவள் போல் அவற்றை இடம் பெயர்க்கின்றாள் என்பதாகக் குறிப்பிடுகின்றாள் திருத்தாயார்.

9. மேலது - 2. 7.: 3. 10. பெரி. திரு. 2.7:4 11. நாச். திரு . 13 : 8