பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

என்று மேலும் திருத்தாயார் தன் மகளைப்பற்றிய தன் பேச்சைத் தொடர்கின்றாள். கண்ணன் திருப்பவளத்தில் வைத்து ஊதுகின்ற புல்லாங்குழலின் ஒசை தன் நெஞ்சைக் கொள்ளை கொள்ளு கின்றது என்கின்றாள். திருப்புட்குழி’ என்னும் திருப்பதியின் நீர்வளங்களை எடுத்துப் பாடுகின்றாள். திருநீர்மலைக்குப்’ போக வேண்டும் என்று பயணம் எடுக்கின்றாள்.

தன்னுடைய மகளின் உண்மை நிலையையும் எடுத்துப் பேசுகின்றாள் திருத்தாயார். தன் மகள் எம்பெருமானிள் சொரூப குணங்களிற் காட்டிலும் அவனுடைய உருவத்தில் ஊற்றம் அதிகமுடையவளாதலால் அதனையே சிந்தித்து நீர்ப்பண்ட மாகின்றாள். எம்பெருமானுடைய திருமேனி அழகு பெரிதா அல்லது இவளுடைய காதன்மை (ஆசை) பெரிதா என்று சீர் துக்கிப் பார்த்தால் இவளுடைய ஆசையே பெரிதாகத் தோன்றுகின்றது. இந்த ஆசையின் காரணமாக இவள் ஒன்றும் செய்ய முடியாதவளாய்ச் செயலற்றுக் காணப் பெறுகின்றாள். அறிவுக்குறைவான தன் வயிற்றில் பிறந்தவளாதலின் இவளும் அறிவு வளர்ச்சி பெறாத நிலையில் உள்ளான். இளம்பருவம் நீங்காத நிலையிலும் எம்பெருமானுடைய சொரூப உருவ குணங்களில் மிகவும் தெளிவுள்ள சிந்தையளாக உள்ளாள்.'” தன்னுடைய குலமரியாதைக்கேற்ப நடந்து கொள்ளும் திறனைச் சிறிதும் ஆராய்கின்றாள் இலள். ‘களைவாய் துன்பம்; களையாது ஒழிவாய்; களைகண் மற்று இலேன்’ என்று கருதி அவன் செய்கிறபடி செய்து கொள்ளட்டும் என்று ஆறியிராமல் பதறுகின்றவளாகையால் ‘தன்குடிக்கேதும் தக்கவாறு நினையாத வளாகின்றாள்’. இலங்கைக் கோனைக் குலத்துடன் அழியச் செய்த செய்தி கேட்டு, ஒரு பிராட்டிக்காக எம்பெருமான் செய்த செயலை எண்ணி, அதில் ஈடுபடாநின்றாள்.’ எப்பொழுதும் எம்பெருமானையே நினைந்தவண்ணம் உளங்கனிந்த நிலையில் உள்ளாள். ‘ மேலும் இவள் நிலைமை,

15. காஞ்சிக்குப் பத்துமைல் தொலைவிலுள்ள ஒரு திவ்விய தேசம். 19. பல்லாவரத்திற்கு மூன்று கல் தொலைவிலுள்ள ஒரு திருப்பதி. 20. பெரி. திரு. 2. 7 : 5 21. திருவாய் - 5.8 :8 22. பெரி. திரு. 2.7:6 23. மேலது 2.7:7