பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஇடஎந்தைஎம்பெருமான் 155

“பொன்குலாம் பயலை பூத்தன மென்தோள்,

பொருகயல் கண்துயில் மறந்தாள்;

அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது; இவ்

அணங்கினுக்கு உற்றநோய் அறியேன்

s’s 24

(பயலை-பசலை; துயில்-உறக்கம்; ஆதரம்-ஆர்வம்; அணங்கு-பெண்)

என்று எடுத்துக் காட்டுகின்றாள். இங்ஙனம் பரகால நாயகியின் நிலையை எண்ணிய வண்ணம் திருக்கோயிலை அடைகின்றோம். இந்நிலையில் ‘பிராப்திக்கு உபாயம் அவன் நினைவு’ என்ற சூத்திரத்திற்குப் பிள்ளை உலகாசிரியர் இத்தலத்து எம்பெருமான் பாசுரத்திலிருந்து ‘உன் மனத்தால் என் நினைந்திருந்தாய்’ என்ற அடியை எடுத்துக் காட்டியிருப்ப தையும் சிந்திக்கின்றோம். மேலும், இத்திருமொழியில் ஆழ்வாருக்குந் தலைவியின் நிலை ஒரு புறத்திலும், தாயின் நிலை மற்றொரு புறத்திலும் நடக்கின்றபடியால் எம்பெருமாளை அநுபவிப்பதில் ஆழ்வாருக்கு விரைவு உண்டானமையும், ‘நாம் பதறக் கூடாது’ என்கின்ற எண்ணம் மற்றொரு புறத்திலுண்டான மையையும் அறிகின்றோம். தன் நிலையை நோக்கும்போது பதற்றமற்ற நிலையும், அவனது பேரழகை நோக்கும்போது பதற்றநிலையும் மாறி மாறி உண்டாதலைச் சிந்திக்கின்றோம். ‘உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்?’ என்பது போன்ற வினாக்களால் பதற்றமற்ற நிலையையும், ‘ஆசை விடாளால்’, ‘மாலிருஞ் சோலை மாயனே’, ‘துணை முலை அரக்கும்’ என்பன போன்ற வாசகங்களால் பதற்ற நிலையையும் உணர்கின்றோம்.

திருக்கோயிலில் புகுந்ததும் நேராக எம்பெருமானின் சந்நிதியை அடைகின்றோம். கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் அகிலவல்லித் தாயாரைத் தமது இடக்கரத்தில் ஏந்திய நிலையில் பரமரசிகராய்ச் சேவை சாதிக்கும் மூலவர் ஆதிவராகப் பொருமானை உளமாரத் துதித்து வணங்குகின்றோம். உற்சவர் நித்திய கல்யாணப் பெருமாளும் கோமளவல்லித் தாயாரும் திருக்கல்யாண அவசரத்தில் எழுந்தருளியிருப்பதாக ஐதிகம் ஒன்று உண்டு. இவ்விருவர் திருமேனியிலும் தாடையில் பொட்டு இயற்கையாகவே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தலத்தில் ‘குலங்கெழு கொல்லிக் கோமளவல்லித்’ தாயார் தனிக்கோயில்

24. மேலது . 2.7 : 9 25. பூநிவச. பூஷ இரண். பிரகரணம் - 44.

26. பெரி. திரு . 2. 7:8