பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

கோயில் உள்ளது; அதையும் பார்க்கலாம். அப்பர் பெருமானும் ஞான சம்பந்தரும் பாடிய தலம் இது. சிவபெருமான் அசுரர்களை வதை செய்த எட்டு வீரட்ட தலங்களில் இதுவும் ஒன்று. மேலுரில்தான் திருமால் ஆலயம் உள்ளது; அது பெண்ணை யாற்றுத் தென்கரையில் உள்ளது; பாலத்தின்மூலம் ஆற்றைக் கடந்துதான் மேலுரை அடைதல் வேண்டும்; ஆற்றில் நீர் இல்லாத பொழுது ஆற்றின் குறுக்கே நடந்தும் போகலாம். திருக்கோவலூர் இருப்பூர்தி நிலையத்திலிருந்து மாட்டு வண்டி, குதிரை வண்டி வசதிகள் உள்ளன.

திருக்கோவலூர் ஒர் அழகான திருப்பதி: நீர்வளமும் நிலவளமும் மிக்க ஊர். ஆண்டவனின் உடலாக இருக்கும் அசித்தின் அழகினை இப்பகுதியில் கண்டு களிக்கலாம். முதலாழ்வார்கள் மூவரும் திருமங்கையாழ்வாரும் இத்தலத்து எம்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளனர். இத்திருப்பதி யின் நீர்வளம், நிலவளங்கள் திருமங்கையாழ்வாரின் பாசுரங்களில் நன்றாகச் சித்திரிக்கப்பெறுகின்றன. தோப்புகளும் சோலைகளும் சூழ்ந்த அழகான பகுதியில் இவ்வூர் அமைந்துள்ளது. தென்னந் தோப்புகள், கமுகந் தோட்டங்கள், மாஞ்சோலைகள் முதலிய வற்றை எம்மருங்கும் காணலாம்.

‘கோங்குஅரும்பு சுரபுன்னைக் குரவுஆர் சோலைக்

குழாம்வரிவண்டு இசைபாடும் பாடல் கேட்டுத் தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த

திருக்கோவலூர்’

(கோங்கு, சுரபுன்னை, குரவு-மரவிசேடங்கள்: கண் வளரும்-கணுக்கள் வளரும்; உறங்கவுமாம்)

என்பது பாசுரப்பகுதி. கோங்கு அரும்புகளும், சுரபுன்னைகளும், குரவமலர்களும் நிறைந்த சோலைகளில் கூட்டங் கூட்டமாக வுள்ள வண்டுகள் பூக்களிலுள்ள மதுவினையுண்டு அந்தக் களிப்பினால் இன்னொலிகளை எழுப்புகின்றன. அந்த'இசைப்

4. முத. திருவந். - 1, 77, 86 இரண். திருவந் 1, 80 : மூன். திருவந் 1. 5. பெரி. திரு. 2.4 : 1 , 2. 10 : 5.6 : 7, 7.3; 2 : 7, 10 : 4; திருநெடுந் 6, 8, 17 ; சிறிய திருமடல் - கண்ணி 69. 70 ; பெரிய திருமடல் - கண்ணி 122. 6. பெரி. திரு. 2. 10 : 4