பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

செந்நிறப் பாக்குப் பழங்களோ பவளங்களைப் போல் காட்சியளிக்கின்றன. பாக்கு மரங்களினுடே வளர்ந்துள்ள சரபுன்னையின் மொக்குகள் மலர்ந்து சோலையினைப் பொலிவுறச் செய்கின்றன. இந்தச் சூழ்நிலையை,

“கருங்கமுகு பசும்பாளை வெண்முத்து ஈன்று

காயெல்லாம் மரகதமாய்ப் பவளங் காட்ட”

(கமுகு-பாக்கு)

என்ற ஆழ்வாரின் பாசுரப் பகுதியில் காணலாம்.

வயல் வாய்ப்பும் பொழில் வாய்ப்பும் இயல்பாகவே அமையப்பெற்ற இந்தத் திவ்விய தேசம் ஒரு பொற்கொல்லனின் களரிபோல் காட்சியளிக்கின்றது. தட்டானின் பட்டறையில் கரிகள் கொட்டப்பெற்றிருக்கும்; பொன்களும் முத்துகளும் நிறைந்திருக்கும்; தீப்பிழம்பு சுடர் விட்டுக் கொண்டிருக்கும். திருக்கோவலூர் அங்ஙனம் காட்சியளிக்கின்றது.

“எழுந்தமலர்க் கருநீலம் இருந்தில் காட்ட,

இரும்புன்னை முத்துஅரும்பிச் செம்பொன் காட்ட

செழுந்தடநீர்க் கமலம் நீ விகைபோல் காட்டும்

திருக்கோவலூர்’

(எழுந்த-நீரினின்றும் மேல் கிளம்பின; கருநீலம்-கருநெய்தல்; கமலம்-தாமரை, தீவிகை - விளக்கு)

என்ற ஆழ்வாரின் பாசுரப் பகுதி இக்சாட்சியினைத் தெளிவாகக் காட்டுகின்றது. இங்குக் கருநீலமலர்கள் கரியாகவும், புன்னை யின் மொக்குகள் முத்துக்களாவும், புன்னைப் பூக்கள் பொன்னாகவும், தாமரை மலர்கள் நெருப்பாகவும் உருவகிக்கப் பெற்றுள்ள கவிதைகளின் நயம் அநுபவித்து மகிழத்தக்கது. இத்தகைய சோலைகள் சூழ்ந்த திருப்பதியில் தென்றற் காற்று வீசி அச்சூழலை மேலும் இன்பமயமாக்குகின்றது.

8. பெரி. திரு. 2. 10 : 7 9. மேலது. 2. 10 : 3.