பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவலூர்த் தீங்கரும்பு 195

‘சிறையணைந்த பொழில்அணைந்த தென்றல் வீசும்

திருக்கோவ லூர்’

(சிறைஅணைந்த-நீர் அரண் நெருங்கின; பொழில்-சோலை)

என்ற பாசுரப் பகுதியால் இதனை அறியலாம். இவ்வளவு வளத்திற்கும் அவ்வூரருகில் ஒடும் பெண்ணையாறே காரணமாகும். பெரும்பாலான நாட்களில் நீர்வற்றிக் கிடக்கும் இந்த ஆற்றில் மழைக் காலத்தில் வெள்ளம் பெருகியோடும்; கோடையில் ஊற்று நீர் கிடைக்கும். இதுபயிரிடுவதற்கும் பயன்படும். ஆகவே, ஆழ்வாரும் ‘துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணை’ என்று அவற்றைப் புகழ்வது காண்க.

இந்தச் சூழ்நிலையில்அமைந்துள்ளது திருக்கோவலூர். இருப்பூர்தி நிலையத்திலிருந்து குதிரை வண்டியில் ஏறி இச்சூழ்நிலையைக் கண்டு களித்த வண்ணம் திருக்கோவலூரை அடைகின்றோம். திருக்கோவலூர் ஒரு சிறிய ஊரே. எனினும், நல்ல கட்டட வசதிகள் சிறந்த ஊர் என்றே சொல்லலாம். ‘செல்வச், செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்’ என்று இந்த ஊரின் மாட மாளிகை அமைப்பினைச் சிறப்பிப்பர் திருமங்கையாழ்வார். இந்தத் திருப்பதியில் ஏழு இசைகள், ஆறு அங்கங்கள், ஐந்து வேள்விகள், நான்மறைகள், முத்தீ ஆகியவற்றைக் கொண்டு இறைவனை இடையறாமல் துதிக்கும் ‘'தூய நான்மறையாளர்’ வாழ் கின்றனர். இதனை,

“வந்தனைசெய்து இசையேழா(று) அங்கம் ஐந்து

வளர்கேள்வி நான்மறைகள் மூன்று தீயும்

சிந்தனைசெய்(து) இருபொழுதும் ஒன்றும் செல்வத்

திருக்கோவ லூர்”

(வந்தனைசெய்து-அடிபணிந்து; இருபொழுதும்-இரவும்பகலும் (காலையும்

மாலையும்); சிந்தனை செய்து-மனனம் செய்து ஒன்றும்-பொருந்தும்)

10. பெரி. திரு. 2. 10 : 5 11. மேலது. 2. 10:1. 12.மேலது. 2. 10 : 6 13. மேலது - 2. 10 : 2