பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தொண்டை நாட்டுத் திருப்பதிகள்

இந்நிலையில் புராணக்கண் திறக்கின்றது; பல காட்சிகள் நம் மனக்கன முன் தோன்றுகின்றன. ஒரு காலத்தில் நான்முகன் மனக்கண் முன் தோன்றுகின்றன. ஒரு காலத்தில் நான்முகன் சபையில் தேவர்களும், முனிவர்களும் நிறைந்திருக்கும்பொழுது நாமகள், பூமகள் இவர்களுள் யார் சிறந்தவர் என்ற வினா எழுந்தது. அப்பொழுது நான்முகன் எம்பெருமானுடைய திருமார்பை இடமாகக் கொண்ட பெரியபிராட்டியாரே சிறந்தவள் எனக் கூறினான். அதனைக் கேட்டு மிகவும் வருந்திய நாமகள் தன்னுடைய கூறாகப் பூமியில் பெருகிவரும் சரசுவதி நதியையேனும் நதிகளில் சிறந்ததாகக் கொள்ள வேண்டு மென்றாள். அதற்கு நான்முகன் ‘எம்பெருமானுடைய திருவடி யினின்றும் தோன்றிய கங்கையை விடச் சிறந்த நதி இல்லை’ என்றான். இதைக் கேட்டு நாமகள் சரசுவதி நதிக்கரையில் தவம் புரிந்தாள்.

இந்த நிலையில் நான்முகன் எம்பெருமானைச் சேவிப்பதற்காகக் காஞ்சியில் அசுவமேத யாகம் தொடங்கினான். மனைவி இல்லாமல் யாகம் செய்யக் கூடாது என்ற சாத்திர விதியை யறிந்த நான்முகன் தன் துணைவியை அழைத்து வருமாறு தன் உத்தம புத்திரனான வசிட்டனை அனுப்பினான். அங்ஙனமே வசிட்டன் தவம் புரியும் நாமகளை நாடி அவளை வருமாறு வேண்ட, அவள் ஊடல் நீங்காததால் வர மறுத்து விட்டாள். நான்முகன் சாவித்திரி முதலிய மற்ற மனைவியரை வைத்துக் கொண்டு யாகத்தைத் தொடங்கினான். யாகத்தில் தேவர்கள் மரியாதை செய்யப் பெறுவதைக்கண்ட அசுரர்கள் சினமுற்று இந்த யாகத்தைக் கலைக்க எண்ணினர். அவர்கள் தவம் புரியும் சரசுவதி தேவியிடம் சென்று கலகம் மூட்டினர். அவளும் கடுஞ்சினம் கொண்டு சரசுவதி நதிக்குத் தென் திசையில் ‘வேகவதி’ என்னும் வேறொரு நதியாகப் பெருகி நான்முகனின் யாகசாலையை அழிக்க முற்பட்டாள்.

இந்நிலையில் பக்தர்களைக் கைவிடாத எம்பெருமான் நான்முகன்மீது கருணை கொண்டு அந்த வெள்ளத்தின் நடுவில் பாம்பனையோடு தானும் ஒர் அணையாகக் குறுக்கே பள்ளி கொண்டான். இதனை,

“அன்று நயந்த அயமேத மாவேள்வி
பொன்ற உரை அணங்கு பூம்புனலாய்க்-கன்றிவர