பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொன்னவண்ணம் செய்தபெருமாள்

21


ஆதி அயனுக் கருள்செய் தனையானான்
தாதை அரவணையான் தான்’

(அயமேதம்-அசுவமேதம்; உரை அணங்கு-வாக்கின் தேவதை நாமகள், புனல் நதி, கன்றி-சினந்து: தாதை-தந்தை அனை ஆனான் - அணையாகப் பள்ளி கொண்டான்; அரவு அணையான்-பாம்பைப் படுக்கையாகக் கொண்ட பரமபதநாதன்)

என்று கூறுவர் வேதாந்த தேசிகர். அந்தக் கோலத்தில் இன்னும் அப்பெருமான் சேவை சாதித்து வருகின்றான் என்பது வைணவர்களின் நம்பிக்கை. அணையாகப்படுத்த அப்பெருமான் 'வேகா சேது' என்ற வடமொழித் திருநாமத்தாலும் வழங்கப்பெறுகின்றான். ‘வேகா சேது” என்ற சொற்றொடர் தமிழில் ‘வேகவணை’ என்று மொழி பெயர்ந்தது. பின்னர் அது, ‘நாகவணை’ என்பது ‘நாகனை’ என்று விகாரப்படுவதுபோல ‘வேகனை என்று விகாரப்பட்டது. நாளடைவில் வெஃகணை’ எனத் திரிந்து தானியாகு பெயராகத் தலத்தைக் குறித்தது.” அது பின்னர் வெஃகா என்று மருவி வழங்கி வருகின்றது என்பதாகக் கூறுவர். ஆழ்வார்களுள் சிறந்தவரான நம்மாழ்வார் தமது முதல் பிரபந்தமாகிய திருவிருத்தத்தில் திருவரங்கம், திருவேங்கடம், திருவெஃகா என்ற மூன்று திருப்பதிகளை மட்டிலுமே மங்களா சாசனம் செய்தமைபற்றி அம்மூன்றும் முறையே கோயில், திருமலை, பெருமாள்கோயில் என்று வழங்குவதாகப் பெரியோர் பணிப்பர்.

இந்த எண்ணங்களுடன் திருக்கோயிலினுள் நுழைகின்றோம். மேற்கு நோக்கிய திருமுக மண்டலங் கொண்டு புயங்கசயனமாகப் பள்ளி கொண்டிருக்கும் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாளையும்’, தாயார் கோமளவள்ளி நாச்சியாரையும் சேவிக்கின்றோம். இத்தலத் திருக்குளத்தில் அவதரித்தவராகக் கருதப்பெறும் பொய்கையாழ்வாரின்,13. தேசி பிரபந்-220

14. தனியாகு பெயர் (விளக்கம்): எ.டு. மாம்பழத்தைக் கூப்பிடு. மாம்பழத்தின் பெயர் மாம்பழத்தைச் சுமப்பவனைக் குறிக்கின்றது. மாம்பழம் சுமப்பவன் தானம் (ஸ்தானம்). தானத்திலுள்ளது தானி. தானியின் பெயர் தானத்திற்கு ஆனதால் தானியாகு பெயர். ஈண்டு வெஃகணை’ என்ற அணையின் பெயர் அஃது உள்ள தானத்திற்கு ஆனதால் தானியாகு பெயர் என்பது அறியப்படும்.