பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

பாகமாகிய உபநிடதங்களையே குறிக்கின்றது. வேதம்’ என்னும் சொல் வேதத்தின் இரண்டு பாகங்களையும் குறிப்பதாக இருப்பினும், ‘கலைகள்’ என்பதற்கு ஒரு பாகத்தைப் பொருளாகக் கொண்டு விட்டதனால், ஈண்டுக் கர்மகாண்டத்தை மட்டிலும் குறிப்பதாகக் கொள்ளப்பெற்றது. இதிகாசங்கள் யாவும் நீதியை உயர்த்தும் நூல்களாகும். வேதங்களில் விதிக்கப்பெற்ற கருமங்களை அநுட்டிக்கும் முறைகளை உணர்த்தும் நூல் ‘கல்ப சூத்திரம் ஆகும். ‘சொல்’ என்பது, சொற்களின் உண்மைப் பொருளை ஆராய்ந்து உரைப்பது ‘மீமாம்சை சாத்திரமாகும். இத்தகைய சாத்திரங்களையெல்லாம் எம்பெருமான் தானான தன்மையினாலும், முனிவர்களிடம் அந்தர்யாமியாக இருந்தும் வெளியிட்டருளினான் என்பது வைணவர்களின் நம்பிக்கை. மேற்குறிப்பிட்ட சாத்திரங்களில் விதிக்கப்பெற்ற கருமங்களை முறை தவறாது அநுட்டிப்பவர் கட்கு அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு ஒவ்வொரு நிலை வருவதாகச் சொல்லப் பெற்றுள்ளனவற்றையும் எம்பெருமானே ஏற்படுத்தி வைத்தான் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

எம்பெருமான் கடல்போல் இருப்பவன் என்று சொல்லுவ துண்டு. நிறம்பற்றி வந்த உவமையாகச் சொல்லுவது இது. ‘முகில் வண்ணன்’, ‘மைவண்ணன்’ ‘கடல் வண்ணன்’ என்ற பெயர்களினால் இதனை அறியலாம். ஈண்டுச் சொல்லப் பெறுவது: கடலிலுள்ள பொருள்கள் யாவும் எம்பெரு மாணிபத்திலும் உள்ளன என்பதாகும். கடலிலுள்ள மைநாகம் போன்ற மலைகளை நினைந்தும், எம்பெருமானிடத்திலும் திருத்தோள்களை நினைந்தும் ‘கடலும் மலைகளையு டையது,எம்பெருமானும் மலைகளையுடைவன்’ என்று கூறப் பெறுகின்றது. கடலிலும் மாமணிகள் உள்ளன; எம்பெருமானும் ‘குருமாமணிப்பூண் என்று கெளத்துவ மணியையுடையவன். மலர்மங்கை தங்கப்பெற்றது கடல்; எம்பெருமானும் ‘’ ‘அகலகில்லேன் இறையும்’ என்ற அலர்மேல்மங்கை உறை மார்பன். ‘சங்குகட்கு உறைவிடம் கடல்; எம்பெருமானும் இடக்கையில் திருவாழியைத் தரித்திருப்பவன்.

எம்பெருமானின் கோலநிறத்திலே ஊன்றி விடுகின்றது ஆழ்வார் நாயகியின் நெஞ்சு. ‘இவருடைய தன்மைகளை எந்த

13. திருவாய் - 6.10:10,