பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைகுண்டப்பெருமாள் 57

‘சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச்

சுவைஊறுஒலி நாற்றமும் தோற்றமுமாய் நல்லரன் நாரணன் நான்முகனுக்(கு)

இடம்தான் தடஞ்சூழ்ந் தழகாயகச்சி பல்லவன் வில்லவன் என்றுலகில்

பலராய்ப் பலவேந்தர் வணங்குகழற் பல்லவன் மல்லையர் கோன்பணிந்த

பரமேச்சுர விண்னக ரமதுவே”

(வன்சொல்-வேதம்; பணிந்த-அடிமை செய்த; பல்லவன், வில்லவன்

என்போர் அரசர்கள்; மல்லையர் கோன்-கடல் மல்லையைத் தலைநகராகக்

கொண்டு ஆண்டவன்)

என்பது முதற்பாசுரம். சாதாரண சொற்கள் கூட அச்சொற்கள் குறிக்கும் பொருள்களுள் அந்தராத்மாவாய் உறையும் எம்பெருமான் அளவும் சொல்லி நிற்கும் என்பது வேதாந்திகளின் கொள்கை. வேதங்கள் எம்பெருமானைப்பற்றி பேசுகின்றன என்பதை நாம் அறிவோம். ஞானேந்திரியங்களால் அநுபவிக்கப் பெறுபவன் எம்பெருமான். முத்தொழில்களையும் மூன்றுருக் கொண்டு நிர்வகிக்கின்றவன் இவன். இத்தகைய பெருமான் பல்லவமன்னனின் கையங்கரியம் பெற்று பரமேச்சுர விண்ண கரத்தில் எழுந்தருளியுள்ளான்.

அடுத்துவரும் பாசுரங்கள் ஒவ்வொன்றிலும் எம் பெருமானின் வீரச் செயல்களையும் வெற்றிச் செயல்களையும், அவன் அவதாரத்தில் மேற்கொண்ட அருஞ்செயல்களையும் சொல்லிச் சொல்லி அநுசந்திக்கின்றார். ஆழ்வார் ‘புவனங்கள் அனைத்தையும் நான்முகனைக் கொண்டு படைத்தவன் எம்பெருமான்’ என்று வியஸ் டி சிருஷ்டியைப் பற்றிப் பேசுகின்றார்’ இரண்டாம் பாசுரத்தில். இந்த எம்பெருமானே வைகுண்டப் பெருமாள் சந்நிதியில் எழுந்தருளியுள்ளான் என்பது ஆழ்வாரின் திருவுள்ளம்.

12. மேலது - 2.9:1

13. தத்துவத்திரயம் - ஈசுவரப் பிரகரணம் - சூத்திரம்-12 இல் கூறியுள்ள கருத்து இது. சிருஷ்டி இருவகைப்படும் : சமஷட்டி சிருஷ்டி, வியஸ்.டி சிருஷ்டி என. சமஷ்டி சிருஷ்டி - மூலப்படைப்பு (Primary creation) , நான்முகனை நாராயணன் படைப்பது இது. வியஸ்டிடி சிருஷ்டி முற்றிலுமான படைப்பு (Secondary creation); நான்முகன் தொடக்கமானவர்களைக் கொண்டு எல்லாவற்றையும் படைப்பித்தலாகிய செயல் இது. இவற்றின் விரிவான செய்திகள் வைணவ ஆகமங்களில் கூறப்பெறும்.