பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தொண்டை நாட்டுத்திருப்பதிகள்

திருப்பாற்கடலில் அழகெல்லாம் திரண்ட கோலத்துடன் திருவனந்தாழ்வான்மீது பள்ளிகொண்டு திருக்கண் வளர்ந்த வனும் திருவத்திமாமலையில் வரந்தருமா மணிவண்ணனாய் - வரதராசனாய் - எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமானே பரமேச்சுர விண்ணகரத்தில் வைகுண்ட நாதனாகக் காட்சி தருகின்றான் என்று கூறுவதில் எம்பெருமானின் வியூக அர்ச்சைத் திருமேனிகள் பேசப்பெறுகின்றன.” இப்பாசுரத்தில் ‘வரந்தரு மாமணி வண்ணன்’ என்ற சொற்றொடர் அத்திகிரி அருளாளனைக் குறிப்பதாகக் கொள்வர் வைணவப் பெருமக்கள். ஆகவே, இப்பாசுரம் கச்சித்திருப்பதியாரால் இரட்டித்து ஒதப் பெறுகின்றது.

அடுத்த பாசுரத்தில் எம்பெருமான்,

‘அண்டமும், எண்திசையும், நிலனும்,

அலைநீரொடு வான்எரி கால்முதலா உண்டவன் எந்தை பிரான்’

என்று குறிக்கப்பெறுகின்றான். பிரளயப் பெருங்கடலில் சிக்கிக் தத்தளிக்கும் இந்த உலகங்களையெல்லாம் பாலனாக இருந்து திருவமுதுசெய்து ஆலிலையில் அறிதுயில் கொள்ளும் அண்ண லின் அகடிதகடநா சாமர்த்தியம்’ பேசப்பெறுகின்றது. இங்ஙனம் ஆபத்துக் காலத்தில் அனைத்தையும் தம் திருவயிற்றில் வைத்து நோக்கிய பெருமான் சம்சாரப் பெருங்கடலில் தவிக்கும் நம்மை நோக்குவான் வேண்டி பரமேச்சுர விண்ணகரத்தில் எழுந்தருளி யுள்ளான் என்பது ஆழ்வார் பெறவைத்த குறிப்பாகும். ஈண்டு எம்பெருமானின் காத்தல் தொழில் பேசப்பெறுகின்றது என்பது தெளிவு.

ஆனையின் துயர்தீர்த்த அருஞ்செயலும், காளியன் நாகத்தின் கொழுப்பை அடக்கிய தீரச்செயலும் அடுத்து அநுசந்திக்கப்பெறுகின்றன.

14. பெரி. திரு. 2.9:3. 15. பெரி. திரு - 2.9:4. 16. அகடி தகடநா சாமர்த்தியம் - சாதிக்க முடியாதவற்றையும் சாதிக்கும் திறமை (அகடித-சேர்க்க முடியாதவற்றை : கடநா-சேர்த்து வைக்கின்ற ; சாமர்த்தியம் - திறமை).