பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சியில் ஆறும் புறத்தில் ஒன்றும் 81

(மால் வேழம்.பெரி மதயானை: அரவு-பாம்பு; மாயை-சம்பரமாயை, வெற்பு - மலை; மேல்வீழ்படை-வான் முதலியவை: விடம்-நஞ்சு: பாலன்- பிரகாலதன்; குழி - பள்ளம்; ஒதார்-கூறார்; சீர்-சிறப்புக்கள்)

என்ற அப்பாசுரத்தையும் சேவிக்கின்றோம். ‘எம்பெரு மானுடைய திருவடிகளையே சரணமாக நம்பியிருந்த பிரகலாதன் தன் தந்தையின் சூழ்ச்சியால் தோன்றிய போராபத்துக் களினின்றும் நீங்கியதைக் கேட்டறிந்தும் அறியாமையில் ஆழங்கால்பட்டுள்ள இவ்வுலகத்து மக்கள் அப்பெருமானது அந்த கல்யான குணங்களை அநுசந்தித்து நற்கதிபெறாது அறிகின்றனரே என்று கழிவிரக்கம் கொண்டு கூறும் அய்யங்காரின் திருவுள்ளத்தைப் போற்றுகின்றோம்.

தைத் திங்களில் (சனவரியில்) நடைபெறும் தெப்ப உற்சவம் சிறப்பு வாய்ந்தது; பக்த கோடிகளை ஈர்ப்பது. ‘சடாயு தீர்த்தம்’ என்று வழங்கப்பெறும் புஷ்கரணியில்தான் இது நடைபெறுகின்றது. இதன் கரையில் பெரிய உடையாருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. அமாவாசை தோறும் சிறப்பான வழிபாடு உண்டு. அதிகமான பக்தர்கள் வந்து எம்பெருமானைச் சேவிப்பர். மேலே கூறப்பெற்ற காஞ்சியிலுள்ள ஆறு திவ்விய தேசங்களுள் திருப்பாடகம், திருவேளுக்கை, திருத்தண்கா, திருப்பவள வண்ணம் ஆகிய நான்கிலும் எம்பெருமான்கள் தனித் திருக்கோயில்களில் சுதந்திரமாக எழுந்தருளிச் சேவை சாதிக் கின்றனர். திருநிலாத் திங்கள் துண்டத்து எம்பெருமான் ஏகாம்பர நாதர் திருக்கோயிலிலும், திருக்கள்வனுர் எம்பெருமான் காமாட்சி அன்னையின் திருக்கோயிலிலும் ஒண்டுக் குடித்தனமாக எழுந்தருளி, சைவர்களிடம் கைங்கர்யம் பெற்றுக் கொண்டு சேவை சாதிக்கின்றனர். இந்த இரண்டு எம்பெருமான்களும் திருமாலை வணங்காத சில சைவர்களுக்குக் காட்சி தந்து அவர்களை உய்விக்கவே அங்கு எழுந்தருளியுள்ளனர் போலும்! இந்த எண்ணம் நம் சிந்தையில் அலைபாய்ந்த வண்ணம் நம் இருப்பிடத்தை அடைகின்றோம்.

‘மூர்த்திதலம் தீர்த்தம் முறையால் தொடங்கினர்க்கோர் வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே.”

என்ற தாயுமான அடிகளின் திருவாக்கை எண்ணிய வண்ணம் ஒய்வு பெறுகின்றோம்.



-)


46. தா.பா. பராபரக் கண்ணி - 156. தொ.நா-6