பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

கையால் தொழுது தலசய்த் துள்ளம் கசிவார்கள் மெய்யார் குறையும் துயரும் தீர்க்கும் விகிச் தனுர் நெய்யா டுதலஞ் சுடைய நிலா வும் ஊர் போலும் பைவாய் நாகம் கோடல் ஈனும் பா சூரே' :

அப்பர் இத் தலத்து இறைவர் மீது பாடியுள்ள கலிவிருத்தத்தால் ஆயதிருக்குறுந்தொகை இறைவ ரைப்பற்றி அறிவிக்கையில், முதல்வனர், சிந்திப்பார் வினே தீர்த்திடும்-செல்வனுர், தொடர்ந்த வல்வினை போக்கிடும் சோதியார்” என்று புகழ்ந்துள்ளார்.

இப் பதிகத்தில் அகப் பொருளேத் தழுவிய பாடல்கள் நான்கு உள்ளன.

மேட்ட விழ்ந்த மலர் நெடுங் கண்ணிபால் இட்ட வேட்கையர் ஆகி இருப்பவர் துட்ட ரேல் அறி யேன்.இவர் சூழ்ச்சிமை பட்ட நெற்றியார் பாசூர் அடிகளே” என்னும் பாட்டில், "இறைவர் பார்வதி தேவியால் பெரிதும் ஆசை யுடையவராய் இருக்கின்ருர் என்பதை அறியாது, இவர்பால் வேட்கை கொண்ட னள் என் தலைவி. இவரது சூழ்ச்சியைத் தெரிந்திலள். இவர் துட்டராக இருப்பாராளுல் அதனை அறியேன்” என்று தோழி கூறுவதாக இருக்கும் கருத்தைக் காண்க. -

ஒரு பாட்டில் இவர் 'என்னிடம் பலி ஏற்க வந்து என்னை மையல் செய்து தம் ஊரின் பெயரைச்

மெய்யார் - உடம்பில் பொருந்திய, விமலனுர் . சிவ பெருமான். அஞ்சு- நெய், பால், தயிர், கோமயம், கோஜலம் (பஞ்சகவ்வியம்) கோடல் - வெண்காந்தள். நிலாவும் - விளங்கும். ஈனும் - மலரும். மட்டு - தேன். மலர்நெடுங் கண்ணி - மலர் போன்ற கண்ணுடைய உமையம் மை. மலர் நெடுங் கண்ணி என்பது இத்தலத்து இறைவியாரின் பெயராக இருக்கலாம் என்று கருத இடம் உள்ளது.