பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

26. திருக்கச்சூர் ஆலக் கோயில்

இத்தலத்தில் திருமால் ஆமை வடிவில் பூசித்த காரணத்தாலும், ஆலமரம் தல விருட்சமாக இருக் கின்றமையாலும் இது கச்சூர் ஆலக் கோயில் எனப்பட்டது. கச்சபம் என்னும் சொல்லுக்கு ஆமை என்பது பொருள். கச்சய ஊர் கச்சூர் என மருவியது. ஆலயத்திற்கு மேற்கே மலை அடியில் மருந்தீசர் என்னும் பெயரில் இறைவர் எழுந்தருளி யிருக்கின்ருர். மருந்து என்பது உணவாகிய அமு. தத்தைக் குறிக்கும். சுந்தரர் தம் பாட்டில் மலைமேல் மருந்தை என்று இவரைக் குறித்துப் பாடியுள்ளனர். இங்குள்ள தியாகராய மூர்த்தி தொண்டை நாட்டுத் தியாகர்களில் ஒருவர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் பகல் பன்னிரண்டு மணிக்கு இத் தலத்து இறைவ. ரைக் கண்டு வணங்க வந்தார். அவ்வேளை நல்ல பசிவேனே. ஆகவே, இறைவர் சுந்தரரது களேப்பைப் போக்க வீடுகளில் சென்று பிச்சை ஏற்று வந்து சுந்தரரை உண்பித்தார். இப்படி (மருந்து) அமுது தந்து உண்பித்த காரணத்தால் மலே அடி இறைவர், மருந்தீசர் எனப்பட்டார். இறைவர் தம் பொருட்டு உச்சிவேளேயில் பிச்சை எடுத்து வந்து உண்பித்த தைச் சுந்தரர் இத்தலப் பதிகத்தின் இரண்டாம் பாட்டில்,

கச்சே அரவொன் றரையில் அசைத்துக்

கழலும் சிலம்பும் கலிக்கப் பலிக்கென் ஆச்சர் யோத ஊரூர் திரியக்

கண்டால் அடியார் உருகாரே

கச்சு இடுப்புப் பட்டையாக, ஏர் . அழகிய, அரை வ இடுப்பு. அசைத்து கட்டி கழல் - வீரத் தண்டை. சிலம்பு சதங்கை, கலிக்க ஒலிக்க