பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்

னதொரு காட்சியை அளித்தார் என்றும் பாடி யுள்ளனர். இறைவா! நீ உண்டு என்பதற்குச் சாட்சி இவ்வுலகமே என்னும் கருத்தையும் இப் பதிகத்தில் பாடியுள்ளனர். இதனை ஞாலமே கரி யாக' என்னும் அவருடைய வாக்கைக் கொண்டே தெளியவும். -

பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு

மனன் உன் நாமங்கள் பேசுவார்க்

கிணக்கி லாததோர் இன்ப மேவருந்

துன்ப மேதுடைத் தெம்பிரான்

உணக்கி லாததோர் வித்து மேல்விளை

யாமல் என்வினை ஒத்தபின்

கணக்கி லாத்திருக் கோலம் நீவந்து

கட்டி ய்ைகழுக் குன்றிலே’

பிட்டு நேர்பட மண்சு மந்த

பெருந்து றைப்பெரும் பித்தனே சட்ட நேர்பட வந்தி லாத

சழக்க னேன் உனைச் சார்ந்திலேன் சிட்ட னேசிவ லேச க னேசிறு

நாயி னும்கடை யாயவெங் கட்ட னேனேயும் ஆட்கொள் வான்வந்து

காட்டி குய்கழுக் குன்றிலே"

மேலங்கி னேன்கண் ணின் நீரை மாற்றி

மலங்கெ டுத்தபெ ருந்துறை

இலங்கி னேன் வினைக் கேட னேன்இனி

மேல்வி இளவத றிந்திலேன்

பிணக்கு மாறுபாடு, நாமம் - திருப்பெயர், இணக்கு. இலாத.ஒப்பற்ற உணக்கிலாத வித்து-காயாத பிறவியாகிய இதை, திருக்கோலம்-குருதரிசனம், சட்டம்.உடல், சமுக்கன். பொய்மையேன். சிட்டன்-ஆசாரசீலன். மலங்கினேன். கலங் கினேன். மலம்.ஆணவம், கன்மம், மாயை என்கிற மும் மலம், விலங்கினேன் . விலகினேன்.