பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 6 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

8. திருவோத்துனர்

ஒத்து என்னும் சொல்லுக்கு வேதம் என்பது பொருள். இதன் பொருளேத் திருவள்ளுவர் மறப்பி னும் ஒத்துக் கொளல் ஆகும் பார்ப்பான் பிறப் பொழுக்க்ம் குன்றக் கெடும் என்னும் குறட்பாவில் பொருத்திக் காட்டி இருத்தலேக் காண்க. அதாவது "மறந்து விட்டாலும் ஒத்தை (வேதத்தை) நினேவிற் குக் கொண்டு வரலாம். ஆனல் பிராம்மணர்கள் தம் பிறப்பு ஒழுக்கத்திலிருந்து தவறுவார்களா ல்ை கெடுவர் ' என்பது இக் குறளின் பொருள். இத் தலத்தில் இறைவர். தேவர்கட்கும், முனிவர் கட்கும் வேதத்தை ஒதுவித்துத் திருவருள் புரிந்தமை யினுல் இத் தலம், திருஒத்துர் என்னும் பெய. ரைப் பெற்றது. இதுபோது திருவத்துார் என்று இதனேக் கூறுவர். இதற்குத் திருவந்திபுரம் என்னும் பெயரும், திருவேதிபுரம் என்னும் பெயரும் உண்டு. இத் தலத்தில் சிதம்பரரேஸ்வரர் என்னும் பெயரில் ஒரு கோவிலும் உளது. இத் தலம் காஞ்சிபுரத்திற்கு மேற்கே பதினெட்டுக் கல் தொலைவில் இருக்கிறது. அச்சிறுபாக்கம் இரயில் அடியிலிருந்து வடமேற்கே பதினெட்டுக்கல் சென்ருலும் இத் தலத்தை அடைய லாம். இத் தலத்தை அடையப் பஸ் (பேர் உந்து வண்டி) வசதி உண்டு. திருமாகறலிருந்து தென் மெற்கே மண் சாலையில் பதினத்து கல் தூரத்தில் சேயாற்றங் கரையின் வடக்கே அமைந்துளது. இக் கோயில் பெரியது, கோபுரமும், பெரியது. ஆதி கேசவப் பெருமாள் சந்நிதி கோயிலுக்குள் உளது.

இத் தலத்து இறைவர் வேதநாதேஸ்வரர். இறைவியார் இளமுலை நாயகி. தீர்த்தம் வேத தீர்த்தம் எனப்படும். இத்தலத்து இறைவரைச் சூரி யன் பூசித்து ஒற்றைச் சக்கரத் தேரைப் பெற்றனன்.