பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. திருவோத்துச் 77.

சமணர்கள் பாம்புகளே ஏவியபோது, இறைவர் பாம்பாட்டியாக வந்து, அப்பாம்புகளே ஆட்டி அடக்கினர் என்றும் கூறுவர். இது, முருகப்பெருமான் இறைவரை வழிபட்டுத் தரையில் கீறியதும் நீர்வரப் பெறும் வேலேப் பெற்ற தலமும் ஆகும், திருமால் வழிபட்டுப் பிருகு முனிவரால்பெற்ற சாபத்தைப் போக்கிக் கொண்ட தலமும் இதுவே. இஃது இலக்குமி, கல்யாணி மகரிஷியின் சாபத்தால் பெண் மான் உருவம் பெற்றதனே, இங்குள்ள இறைவரைப் பூசித்து அவ்வுருவத்தை நீக்கிக் கொண்ட அரும்பதி, தை மாதம் இங்குப் பெரிய திருவிழா நடைபெறும். தை மாத ரதசப்தமியில் இங்கு நடக்கும் தேர்விழா சிறப்புடையது.

இத் தலத்துக் கல் வெட்டின் மூலம் இறைவர் ஒத்துார் உடைய நாயனர் எனக் குறிக்கப்பட். டுள்ளனர். மேலும் இங்குள்ள கல் வெட்டுகளால் கோயில் தினசரி வழிபாட்டிற்கும், நிவேதனத் துக்கும், பூந்தோட்டத்திற்கும், அர்ச்சகருக்கும் நிலங். கள் தானமாகக் கொடுக்கப்பட்டன என்பதும் அறிய வருகின்றது. விளக்கிடுவதற்காகப் பசுக்கள் வாங்கி விடப்பட்டன. மூன்ரும் குலோத்துங்க. மன்னன் இறைவனுக்குப் பொன் அணிகளைத் தந்: துள்ளனன். இங்குக் கேதாரி நாதர் என்னும் பெயரில் ஒரு மடம் இருந்ததாகத் தெரியவருகிறது.

திருஞான சம்பந்தர் இங்கு வந்தபோது சிவ னடியார் ஒருவர் தாம்வைத்த பனே, ஆண் பனையாக ஆனமையின், அவரை வணங்கி, பெருமானே ! சமணர்கள் இத்தலத்தில் உள்ள பனைகள் ஆண் பனைகளாக இருக்கின்றன. அவைகள் பெண் ப&ன களாக மாறிக் காய்களைத் தரக் கூடாதா?’ என்று கூறி எங்களே ஏளனம் செய்கின்றனர். இந்த இழிசொல் நீங்க வழி செய்யவேண்டும்” என்று: