பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

வேண்டத் திருஞானசம்பந்தர் "பூத்தேர்ந்து' என்று தொடங்கும் திருப்பதிகம் பாடித் திருக்கடைக் காப்பாம் ஈற்றுப் பாடலை,

குரும்பை ஆண்பன் ஈன்குல்ே ஒத்துச் அரும்பு கொன்றை அடிகளைப் செருப்பு கலியுள் ஞானசம் பந்தன் சொல் விரும்பு வார் வினே வீடே ' என்று பாடினர். இப்பாட்டின் முதல் அடியின் பொருள் ஆண் பனேகள் குரும்பைகளே (பனங் காய்களே)த் தரும் திருவோத்துனர் என்பது. இங்ங்ணம் பாடிய அளவில் ஆண் பனைகள் உடனே பனங் குல்க்ளுடன் காட்சி அளித்தன. இக் காட்சியினக் க்ண்டு சைவப் பெருமக்கள் மகிழ்ந்தனர். சமணர் கள் வெட்கித் தலே குனிந்தனர். ஆளுல், சம்பந்தர் காலத்தில் இருந்த அப்பனேகள் இதுபோது அக் கோவிலில் இல்லை. பனே இருந்தது என்பதைக் குறிக்க ஆலயத்துள் கல்லினல் பனைமரம் செய்யப் ப்ட்டு வைக்கப்பட்டுள்ளது. கல்லால் அமைத்த இப்ப்னைக்குப் பூசையும் உண்டு. அப்பனேயின் தோற்றம் பாதி ஆணும், பாதி பெண்ணுமாகக் காணப்படுகிறது.

சம்பந்தர் இத்தலத்துப் பதிகத்தில் இறைவியின் திருப்பெயரை இரண்டாம் பாடலில், "இடையீர் போகா இளமுலையாள்' என்று குறிப்பிட்டுள்ளனர். இடையீர் போகா என்பதன் பொருள், இரு முலை களுக்கு இடையே ஈர்க்குக்கூடப் போகா அவ்வளவு நெருக்கமான” என்பது.

இத்தலத்திற்குத் திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் ஒன்றே உளது. இப்பதிக பாப்பை ஆசிரியத் ஈன் - தரும். செரு - வயல். புகலி என்பது சீர்காழிக்கு ஒரு பெயர். வீடு விடுதலை ஆகும். ஆடிகளே. சிவபெருமானை.