பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


19 அந்தக் காலத்தில் மக்கள் குறிப்பிட்டு வந்துள்ளனர். ஊனம் என்ருல் குறைவு; ஒன்று, ஊனப் பத்து அல்லது ஊனமர்ன பத்து என்ருல், ஒன்று குறைந்த பத்து அதாவது ஒன்பது (9) என்று பொருளாம். இந்த வழக்காறு அன்று இருந்தது எ ன் னு ம் உண்மையை, ஒன்பாைெடு பத்து நூறு மொன்றின்' என்னும் நன்னூல் நூற்பாவிற்கு உரையாசிரியர் மயிலைநாதர் எழுதியுள்ள உரைப் பகுதியால் அறியலாம். அவ்வுரை, உ. வே. சாமி காதையர் பதிப்பிலுள்ளாங்கு அப்படியே வருமாறு: 'ஒன்பாைெடு பத்து...........................திரிப்பது நெறியே' எ-ன், தொண்ணுறும் தொள்ளாயிரமும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள் ) ஒன்ப தென்னும் எண் முன்னர்ப் பத்தும் நூறுமான எண்கள் வரின், கிலேமொழி யான ஒன்றுானப் பத்தானே வருமொழிக ளிரண்டையு மாறி அதன் பின் அதன் ஓகாரத் துடனே ஒரு தகர வொற்றைச் சேர்த்துப் பஃதென் பதனை யொழித்து முறையே ணகரமும் ளகரமு மாக னகர வொற்றைத் திரிப்பது முறைமை எ-று. ஒன்றுானமான பத்து - ஒன்பது; அஃது அக் காலச் சொல். - வ-று. தொண்ணுாறு, தொள்ளாயிரம் என வரும். -

  • நன்னூல்-எழுத்ததிகாரம்-உயிரீற்றுப் புணரியல்-44,

உ. வே. சாமிநாதையர் பதிப்பு.