பக்கம்:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

56



6. களைப்பு எப்படி ஏற்படுகிறது


உடல் எடையும் - உள் எடையும்

நமது உடலின் அடிப்படை அமைப்பு செல் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். பல லட்சக்கணக்கான செல்கள் சேர்ந்து திசுக்கள் (Tissues) ஆவதும், பல்லாயிரக்கணக்கான திசுக்கள் சேர்ந்து ஓர் உறுப்பு (Organ) ஆவதும் பல உறுப்புக்கள் சேர்ந்து ஓர் அமைப்பு (System) ஆவதும் நீங்கள் அறிந்ததே.

ஆக, உடலின் அடிப்படையான திசுக்கள் தாம் முக்கிய பங்கேற்கின்றன. நமது உடலின் எடையில் எவ்வாறு இந்த திசுக்கள் எடுப்பாக அமைகின்றன என்று பார்ப்போம்.

திசுக்கள் ஒரு பெயர் கொண்டதாக இருந்தாலும் அமைப்பில் அந்தந்த இடத்திற்கேற்ப வடிவத்திலும் செயலிலும் மாறுபாடு கொண்டு வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

அவைத் தசைத் திசுக்கள், உறுப்புக்களை இணைக்கும் பொருத்தும் திசுக்கள், எபிதிலியம், இரத்தத் திசுக்கள், மார்புத் திசுக்கள் என்பதாக பெயர் பெற்றிருக்கின்றன.