பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளி அநுபவங்கள் 105 தடை ஏற்படத் தொடங்குகின்றது என்றும், மூன்று அல்லது தான்கு மடங்கு பளுவிற்கு உட்படுங்கால் குருதியோட்டம் கண்ணிற்குச் செல்வது நின்று கண் இருண்டுவிடுகின்றது என்றும் கூறுகின்றனர். சாதாரணமாக ஒரு மனிதன் மூன்று மடங்கு பளுவைத் தாங்கமுடியும் என்றும், நான்கு மடங்கு பளுவைத் தாங்கிளுல் தலைநிமிர்ந்து உட்கார முடியாது என்றும் கைகால்களைக்கூட அசைப்பதற்குச் சிரமப்படும் என்றும் அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர். ஆறு மடங்கு பளுவைத் தாங்க தேரிட்டால் அவன் உணர்ச்சியையே இழந்துவிடுகின் ருளும். மூன்றடுக்கு இராக்கெட்டில் செல்லும்பொழுது இராக் கெட்டு விமானி மிக உயர்ந்த அளவு ஒன்பது மடங்கு பளுவிற்கு உட்பட வேண்டியிருக்கும். தரையினின்றும் கிளம்பிய ஒன்றரை நிமிடத்திற்குள் இந்தப் பளுவிற்கு உட்பட வேண்டியதாகின்றது. முதல் அடுக்கு இராக்கெட்டிலுள்ள பொறிகள் நின்று அது கழலும் நிலையில் பளுவின் அமுக்கம் குறைந்துவிடுகின்றது. இரண்டாவது அடுக்கு இராக்கெட்டு இயங்கத் தொடங்கியதும் மீண்டும் பளு அதிகமாகி எட்டு மடங்கு வரை எட்டுகின்றது. சிறிது தேரத் தில் இது கழன்று விழுங்கால் பளு குறைந்துவிடுகின்றது. மீண்டும் மூன் ருவது அடுக்கு இராக்கெட்டு இயங்கத் தொடங்கியதும் பளு. அதிகரிக்கின்றது. ஆளுல், இம்முறை மூன்று மடங்கிற்கு மேல் எட்டுவதில்லை. எனவே, இந்த மிகுதியான எடை உணர்ச்சி மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் வரை தான் நீடிக்கும். அஃதாவது இராக்கெட்டு கிளம்பிய நேரத்திலிருந்து அது சுற்றுவழியை (Crbit) அடையும் வரையில் விமானி எடை மிகுந்த நிலையைச் சமாளிக்க வேண்டும். இதனைத் தாங்கும் திலே மனிதனே உட்படுத்தும் சோதனைகளிலிருந்துதான் உறுதிப்படுத்துதல் வேண்டும். இராக்கெட்டு விமானிகட்கு மிகுதியான எடை உணர்ச்சி யைத் தாங்குவதற்கு ஓரளவு பயிற்சி அளிக்கப் பெறுகின்றது. மையவிலகு விசைக்கருவி (Centrifuge) யைக் கொண்டு