பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i{}6 தொலே உலகச் செலவு இந் நிலையை உண்டாக்கிப் பயிற்சி அளிக்கின்றனர். நான்கு மடங்கு முதல் பதிகுெரு மடங்கு வரை அழுத்தப் பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்தி அவற்றில் மனிதர்களே வைத்து ஆராய்கின்றனர். சோதனையின்பொழுது மருத்துவர்கள் அருகில் இருந்து கொண்டே இருப்பர். இங்கனம் சோதனை களுக்குட்படுத்தப்பெறுபவர்கட்குத் தளர்ச்சியும் சோர்வும் ஏற்படுகின்றனவேயன்றி, உயிருக்கு யாதொரு விபத்தும் ஏற்படுவதில்லே. இங்ஙனம் ஈர்ப்புவிசையால் அழுத்தப் பெறுங்கால் நிற்பதைவிட உட்கார்ந்திருப்பது நன்று . அதவிைடப் படுத்திருப்பது மேலும் நன்று. படுத்த நிலையில் அழுத்தத்தைத் தாங்கிக் கொள்வது மிகவும் எளிது. உடலுகரமும் மனவுறுதியும் உள்ள விமானிகள் பதினுெரு. மடங்கு வரை எடையால் அழுத்தப் பெறுவதைத் தாங்கி புள்ளதாக அறிகின்ருேம். விண்வெளிச் செலவில் பங்குகொள்ளும் விமானி அமரும் இருக்கை சிறந்த சுருள்வில்களைக் (Springs) கொண்டு,அமைக்கப் பெற்று மிகுதியான எடையைச் சமாளிப்பதற்கேற்றவாறு ஆக்கப் பெற்றுள்ளது. இராக்கெட்டு கிளம்பும்பொழுது உட்கார்ந்தபடியே காலே நீட்டித் தலையைச் சாய்த்துப் படுத்துக்கொண்டு இந்நிலையைச் சமாளிப்பர். தவிர, இராக்கெட்டு புறப்பட்டுச் சிறிது நேரம்தான் இத் திணறல் ஏற்படுகின்றது. அதன் பிறகு விமானிகள் தங்கள் அலுவல் களைக் கவனிப்பதற்கு ஆயத்தமாகி விடுகின்றனர். தவிர, விமானிகள் முயற்சியின்றியே ஜைரோ விமானங்கள், உரோபாம். (Robot) சாதனங்கள் முதலிய சாதனங்களால் இராக் கெட்டுகள் தாமாகவே இயங்குகின்றன. எட்ைவின்மை : இராக்கெட்டின் பிடியிலிருந்து விடுபட்டுத் துணைக்கோள் பூமிக்குக் கிடைமட்டமாக வட்டச் சுற்றுவழியில் இயங்கிக் கொண்டிருக்கும்போது அதற்கும் அதனுள் இருக்கும் பொருள்கட்கும் எடை என்பதே இராது. சில பெளதிக ஆற்றலுக்கு உட்படுவதன் விளைவாக இந்த நிறையின்மை ஏற்படுகின்றது. பூமியின் ஈர்ப்பு:ஆற்றல் தன் மையத்தை