பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளி அநுபவங்கள் 19亨” நோக்கி இராக்கெட்டினை இழுக்கின்றது. ஆளுல், வான வெளியில் செல்லும் இராக்கெட்டு பூமியின் மையத்தினின்றும் மேல்தோக்கிச் செல்லுகின்றது. இராக்கெட்டு விமானம் அதிவேகமான மையம் விலகு விசையுடன் செல்லுகின்றது. இவ்வாறு எதிர்த் திசைகளில் இழுக்கும் ஆற்றலுக்கு. உட்பட்டு மையம் விலகு விசை அதிகரித்துப் பூமியின் ஈர்ப்பு. ஆற்றலுக்குச் சமமானதும் துணைக்கோளிற்கும் அதில் இருப்பவர்கட்கும் எடை இல்லாத உணர்ச்சி ஏற்படுகின்றது. துணைக்கோள் சுற்றுவழியில் சென்றுகொண்டிருக்கும்போதும் இந்த உணர்ச்சி அநுபவம் ஏற்படுகின்றது. இதன் விளைவாக யாவும் அந்தரத்தில் தொங்குகின்றன. இவை மேல்நோக்கியும் போவதில்லை; கீழ்நோக்கியும் இறங்குவதில்லை. நம் வான்மதி விகுடிக்கு 1024 கி. மீ. வீதம் சுழன்றுகொண்டு அந்தரத்தில் தொங்குவதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இங்கனம் நிறையற்ற நிலைமை ஏற்படுங்கால் விண்வெளிக் கூண்டினுள் சில விசித்திர நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. துணைக்கோளினுள் சேர்த்துக் கட்டப்பெருத பொருள்கள் யாவும் கூண்டிற்குள்ளே பறந்து கொண்டிருக்கும். ஓர் அரை திமிடநேரம் எடையின்மையை உண்டாக்கக் கூடிய சோதனை யொன்றில் விமானி கூண்டினுள் அடியில் கிடந்த பென்சில் ஒன்று மேலே எழுந்து கூண்டினுள் தன் கண் எதிரில் மிதப்பதைக் கண்டு வியப்புற்ருராம். இதன் காரணமாகத் தான் துணைக்கோளினுள்ளிருக்கும் விமானி கூண்டினுள் திருகாணிகளால் பொருத்தப்பெற்றிருக்கும் இருக்கையுடன் சேர்த்துக் கட்டப்பெற்றிருப்பார். இல்லையெனில் அவர் இருக்கையுடன் கூண்டினுள் பறக்க வேண்டியநிலை ஏற்படும் ! இங்கனம் நிறை இல்லாத உணர்ச்சி ஏற்படுவதகுல் நேரிடும் விளைவுகளைப்பற்றிப் பல சோதனைகள் செய்யப் பெற்றுள்ளன. இந்நிலையால் உயிருக்கு எவ்விதத் தீங்கும் நேரிடுவதில்லை. முதலாவதாக எடையின்மையால் குருதி' யோட்டம் சிறிதும் பாதிக்கப் பெறுவதில்லை. இதயம் குருதியை யாதொரு தடையுமின்றி உடலின் எல்லா