பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 தொல் உலகச் செலவு வனவில் திணித்துக்கொண்டு அமுக்கி, பசை வடிவிலுள்ள உணவை உண்ண வேண்டும். இன்ளுெரு விசித்தி நிகழ்ச்சி வினையும் உணரலாம். வயிற்றுக்குள் சென்ற பிறகும் உணவு வயிற்றின் அடிப்பகுதியை அடையாமல் மிதந்துகொண் டிருக்கும். ஆயினும், உணவு செரிமானம் ஆவதில் யாதோர் இடையூறும் ஏற்படுவதில்லை. நல்ல வேளையாக எடையற்ற திலேவில் உடலின் உள்ளுறுப்புகள் எவ்விதத் திங்குமின்றி தன்மூக:ே இயங்குகின்றன. சுவாசிக்கும் முறை : விண்வெளியில் கவாசிப்பதற்கு உயிரியம் இன்றிய:ையாததாகின்றது. விண்வெளிக் கலங் களில் திரவ வடிவில் உயிரியத்தை எடுத்துச் செல்லுகின்றனர். தம் பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் 21 சதவிகிதம் உயிரியமும் 18 சதவிகிதம் நைட்டிரஜனும், ஒரு சதவிகிதம் ஆர்கான் என்ற வாயுவும் மற்றும் வாயுப் பொருள்களும் உன்னன. விண்வெளிவிலிருக்கும்போது இவ் விகிதத்தில் வாயுக்கள் கலப்பதில்லை. விண்வெளியில் காற்றின் அழுத்தம் மிகவும் குறைந்துவிடுகின்றது என்பதை நாம் அறிவோம். தேவையான அளவு காற்றழுத்தம் இருக்கும் வரையில் நைட்டிரஜன் தம் குருதியில் எளிதாகக் கலந்துவிடுகின்றது. அழுத்தம் குதையுங்களில் அது குருதியில் கலக்காமல் குமிழி அனாகத் தோற்றமளிக்கின்றது. இதஞல், ஒருவருக்கு உயிரிழப்பும் நேரிடலாம். கடலில் மூழ்குகிறவர்கட்கும் இதே பிரச்சின்னதான் நேரிடுகின்றது. ஆகவே, உயிரியத் துடன் கலப்பதற்கு நைட்டிரஜனுக்குப் பதிலாக மிக மெல்லிய வாயுவான பரிதியம் (Helium) சேர்க்கப் பெறுகின்றது. பரிதியம் குருதியுடன் நன்கு கலக்கக் கூடிய வாயுவாகும். எனவே, குமிழிகள் தோன்றுவதில்லை. தவிர, பரிதியம் தைட்டிரஜனேவிட இலேசாக இருப்பதளுல் விண்வெளிக் கலத்தில் எடுத்துச் செல்வதும் எளிதாகும். உtை; வசதிகள் : விண்வெளி வீரர்கள் விண்வெளி கூடையை (Space suit) அணிந்து கொள்ளவேண்டும். இஃது இரு உறைகளாலான இரப்பர் சேர்ந்த நைலானலானது.