பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளி அதுபவங்கள் 魏黨露 விலும் விழிப்பு நிலையிலும் இந்த எடுகோள்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். விண்வெளிக் கலத்தினுள்ளிருக்கும் வானுெலிப் பரப்பி, வானுெலி ஏற்பி ஆகிய சாதனங்களைக்கொண்டு விண்வெளி வீரர் பூமியில் விமான தளநிலையத்துடன் தொடர்பு கொண்டிருப்பார். இவற்றைத் தவிர, விண்வெளிக் கலத் தினுன் பொருத்தப் பெற்றுள்ள தொலைக்காட்சி அமைப்பால் விண்வெளி வீரரின் செயல்களனைத்தையும் பூமியிலிருந்த வண்ணம் கண்டறியும் வாய்ப்புகளும் உள்ளன, பயிற்சி பெறல் : மேற்கூறிய அநுபவங்களைப் பெறுவ தற்கு விண்வெளி வீரர்கள் தகுத்த பயிற்சியினைப் பெறுகின் தனர். உடற்கட்டும் உடல்நலமும் உள்ளவர்களே இதற்குப் பொருத்தமானவர்கள், சாதாரணமாக இப் பயிற்சி ஐந்து ஆண்டுக் காலம் தொடர்ந்து நடைபெறும் இருபத்தெட்டு வயதிற்குமேல் முப்பத்தைந்து வயதுக்குட்பட்டும் 162.5 செ. மீட்டர் முதல் 177 3 செ. மீட்டர் வரை உயரமும் உள்ளவர் களே இப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப் பெறுவர். இந்த உயரத்திற்குரிய சராசரி எடையைவிடச் சற்றுக் குறைவான எடையுள்ளவர்களாக இருக்கலாம். இவர்கள் பட்டப்படிப்புடன் வான இயல், பெளதிக இயல், வேதியியல், பொறியியல், மருத்துவ இயல் முதலிய துறை களிலும் கற்றுத் தெளிந்து அறிவு பெறல்வேண்டும். ஏறக் குறைய 1000 பேர் இப் பயிற்சியில் சேர்ந்தால் இறுதியில் 5 பேர்களே எல்லாத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெறலாம். இவர்கள் விமானப் படையினர் போன்று பயிற்சி பெறுதல் வேண்டும். இப் பயிற்சிக்கென்றே பல்வேறு பொறி அமைப்புகள் கண்டறியப் பெற்றுள்ளன. இப் பயிற்சிக் காலத்தில் இரண்டு மூன்று பேர் இராக்கெட்டு விமானத்தைச் செலுத்துவதற்குச் சிறப்பான பயிற்சி பெறுவர். விண்வெனிக் உண்டில் (Astrodome) அவர்கட்கு இப் பயிற்சி அளிக்கப் பெறும். வண்ணப் படங்களின் மூலம் விண்மீன்களின் நிலை, தொ. உ. செ.-8