பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. அம்புலிப் பயணத் திட்டங்கள் விண்வெளிச் செலவில் அம்புலி தான் முதன்முதலாக மக்கள் கவனத்தைக் கவர்ந்தது. வானவீதியில் கண்களுக்கு இனிமையையும் களைத்த உள்ளங்கட்குக் களிப்பையும் இதயத்திற்கு இன்பக் கிளர்ச்சியையும் அளித்துப் பேரெழி லுடன் இலங்குவது வெண்ணிலா. பால் மனம் மாருப் பச்சிளங் குழவியும், இளங்காதலர்களும், முற்றுந்துறந்த முனிவர்களும் அதன் எழிலில் ஈடுபட்டுக் கண்டுகளிக்கின்றனர். கவிஞர்கள் அதன் பேரழகில் ஈடுபட்டுத் தம்மையும் மறந்து பாடுகின்றனர். 'நீலவான் ஆடைக்குள் உடல்ம நைத்து விலாளன்று காட்டுகின்ருய் ஒளிமு கத்தைக் கோலமுழு துங்காட்டி விட்டால் காதல் கொள்ளேயிலே இவ்வுலகம் சாமோ ? வானச் சோலேயிலே பூத்ததனிப் பூவோ தோன்! சொக்கவெள்ளிப் பாங்குடமோ ? அமுத ஊற்ருே : காலேவங்த செம்பரிதி கடலில் மூழ்கிக் கனல்மர் றிக் குளிரடைந்த ஒளிப்பி மும்போ ?' என்று பாடிக் களிக்கின்ருர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஆயினும், இக் காரணங்கட்காக அறிவியலறிஞர்கள் தாம் செல்லும் முதல் தொலைவுலகமாக இதனைத் தேர்ந்தெடுத் தனர் என்று கருதுதல்வேண்டா. இதனை அவர்கள் தேர்ந் தெடுத்ததற்குக் காரணங்கள் அறிவியல் பற்றியவையாகும். 1. பாரதிதாசன் : புரட்சிக்கவி.