பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தொலே உலகச் செலவு ஒவாயிட் (Edward White) என்ற இரு வீரர்கள் ஜெமினி - க் விண்வெளிக்குச் சென்று முதன்முதலாக ஒருவிண்வெளிக் கலத்தை மிகத் திறமையாக விண்வெளியில் நடத்தினர்; ஜான் வொயிட் என்ற அமெரிக்கர் தாம் முதலாக விண் வெளியில் கந்தருவர் போல் அந்தரத்தில் நடந்த மனிதராவர். கார்டன் கூப்பர், சார்லஸ் கொன்ராட் (Charles Conrad) என்ற வீரர்கள் ஜெமினி .5இல் விண்வெளியில் எட்டுநாட்கள் தங்கி** மனிதன் விண்வெளியில் தொடர்ந்து தாக்குப் பிடிக்கும் திறனையும் கால அளவையும் கண்டனர். அடுத்து நான்கு மாதங்களில்" ஃபிராங் போர்மன் (Frank Borman) ஜேம்ஸ் வைல் (James Loveli) என்ற இருவீரர்கள் விண்வெளியில் 15 நாட்கள் தங்கி உலகிலேயே நீண்ட விண்வெளியில் பயணத்தை நிறை. வேற்றினர். இவர்கள் இருவரும் ஜெமினி-7இல் விண்வெளிச் சுற்றுவழியில் வந்துகொண்டிருந்தபொழுது ஜெமினி-6இல் பயணம் செய்த வால்ட்டர் ஸ்கிர்ரா (Walter Schitra), தாமஸ் ஸ்டாஃபோர்டு (Thomas Stafford) ஆகிய இருவரும் முதன் முதலாக விண்வெளியில் சந்தித்தனர். அடுத்து, நீல் ஆர்மஸ்ட்ராங் (Neil Armstrong), டேவிட் ஸ்காம் (David Scott) என்பார் ஜெமினி.8 என்ற விண்கலத்தை அஜெனு (Agena) என்ற ஊர்தியுடன் விண்வெளியில் இணைத்து அடுத்த முதல் துணிகரச் செயலை நிறை. வேற்றினர். மூன்று திங்கள் கழிந்த பின்னர் ஜெமினி-9 இல் பயணம் செய்த தாமஸ் ஸ்டாஃபோர்டு (Thomas Stafford), யூனென் செர்ஜன் (Eugene Cerman) என்பார் வேறு ஒரு துணைக் கோளைத் தனித்தனியாக மூன்று முறை சந்தித்தனர். செர்ஞன் என்பார் விண்வெளியில் முதன்முதலாக 2 மணி 2 நிமிடம் நடந்து அழியாப் புகழ்பெற்ருள். அவர்கள் அட்லாண்டிக் 11. 1985ஆம் ஆண்டு ஆகஃச்டு 21-29ஆம் காட்சன். 12. 1985ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள். 18. 1986ஆம் ஆண்டு மார்ச்சு 16ஆம் நான். 14. 1966ஆம் ஆண்டு சூன் திங்கள்.