பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

தொலை உலகச் செலவு

செல்ல முயன்றபொழுது பறவைகள் வானில் எளிதாகப் பறந்து கானகத்தைக் கடந்ததைக் கண்டு பொறாமைப்பட்டிருக்கவேண்டும். இதன் காரணமாக அவன் கண்ட கனவு பிற்காலத்தில் பல்வேறு நாடுகளிலும் புனையப்பெற்ற கதைகளில் பிரதிபளித்திருத்தல் வேண்டும்.

இங்ஙனம் தோன்றிய பழைய கட்டுக் கதைகளில் ஒன்று சுமார் 3,500 ஆண்டுகட்கு முன்னர்த் தோன்றிய ஃபிர்டௌஸி என்ற தாஜிக் கவிஞரொருவரைக் கவிதை புனையவும் தூண்டியது. அது கைகஸ் என்ற பாரசீக மன்னன் விண்வெளியில் பறக்க முயன்றதைப் பற்றிய கதையாகும். இந்த நிலவுலகங்களையெல்லாம் வென்று தன் ஆட்சிக்குக்கீழ் கொண்டுவந்த அம்மன்னன் விண்வெளியையும் வென்று "முகில் மண்டலத்தையும்" தன் அடிக்கீழ் கொணரத் தீர்மானித்தான். உடனே இலேசான மரத்தால் ஒரு விண் தேர் அமைக்க ஆணையிட்டான். நான்கு வன்மையான இளம் பருந்துகளைப் பிடிக்கச் செய்து அவற்றை அத்தேரில் பிணைக்குமாறு கட்டளையிட்டான். தனக்குத் தேவையான பொருள்களையும் போர்க் கருவிகளையும் எடுத்து வைத்துக் கொண்டு பருந்துகளைப் பறக்குமாறு ஏவினான். தமக்கு முன்னதாகச் சிறிது தூரத்தில் பிணைக்கப் பெற்றிருத்த இறைச்சியைப் பெறுவான்வேண்டி அந்தப் பருந்துகள் நான்கும் விண் தேருடனும் அதில் அமர்ந்திருத்த மன்னருடனும் விண்வெளியில் பறந்து சென்றன. ஆயினும், இந்த "உயிர்ப்பொறிகள்" பொருளற்ற இந்த விளையாட்டில் சோர்வுற்று நல்லூழற்ற வெற்றி மன்னனுடன் ஏமாற்றத்துடன் பூமியைத் திரும்ப வந்தடைந்தன.

இத்தகைய கிரேக்க கதையும் ஒன்றுண்டு. டௌடால்பின் மைந்தன் கவலையே இல்லாத ஜக்கேரஸ் என்பான். சிறகுகளாலான இறக்கைகளை அரக்கினால் தன் புயத்தில் ஒட்டிக்கொண்டு விண்வெளியில் பறந்தான். அவன் பதற்றத்துடன் கதிரவன் அருகில் பறந்ததால் கதிரவனின் வெப்பத்தால் அரக்கு உருகி இறக்கைகள் கழன்று பூமியில் விழுந்து