பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணிகரமான கனவு மாண்டான். இக் கதையிலிருந்து கதிரவனின் அருகி லுள்ள புதன் கோளுக்குச் சென்றுவரத் திட்டமிட்டுள்ள ஜிண்வெளிப் பயணிக்கு ஒரு படிப்பின் உள்ளது. தன் பயணத்தில் சிறிதளவு தவறிலும், ஐக்கே லாக்கு ஏற்பட்ட கதியே தனக்கும் நேரிடும் என்று கருதவேண்டும். இங்கனம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் விண்வெளியில் பறந்து செல்லுதல் கனவு நிலையிலேயே இருந்து வந்தது. உயிர்ப் பிராணிகளின் படைப்பேனியில் மேல்படியில் உள்ள மனிதனின் உடல் அமைப்பு பறப்பதற்கென்று ஏற்படவில்லை. ஆயினும் அவன் மண்டையில் நாற்பத்' தொன்பது அவுன்சு எடைக்குச் சற்று மேற்பட்ட மூனேயில் எல்லா நுணுக்க முறைகளையும் கண்டறியவல்ல ஆற்றல் நிறைந்திருக்கின்றது. அந்த ஆற்றலின் காரணமாக அவன் இயற்கையை வென்று வாகைசூடி வருகின்ருன் ஆகிலும், அவன் கண்டது கைம்மண் அளவு ; காணுதது உலகளவு, மனிதனிடம் இயல்பாகவே அமைந்திருக்கும் இயல்பூக்கங் assifist (Instincts) siósgåågå. (Instinct of curiosity} orgy. பிற உலகங்களுக்குச் சென்று வசல்வேண்டும் என்ற நோக்க மாக மனிதனிடம் செயற்படத் தொடங்கின துடிப்பைப் பல நாடுகளில் வழங்கிவரும் கற்பனைக் கதைகளினின்றும், பீற நூல்களினின்றும் ஒருவாறு அறியலாம். இந்த அகிலத்தில் (Universe) நம் பூமியைப்போலப் பிற கோள்கள் இருப்பதை அறிந்துகொண்ட நாளிலிருந்து அக் கோள்கட்குச் சென்று வரவேண்டும் என்ற பேரார்வமும் அவனிடத்தில் நிரந்தர மாகவே குடி கொண்டுவிட்டது என்று கூறலாம். இந்த ஆர்வத் துடிப்பின் காரணமாகவே விண்வெளிச் செலவு. பற்றிய கற்பனைக் கதைகள் பல்வேறு நாடுகளிலும் தோன்றின என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை. பழங்கால கிரேக்க நூல்களில் இத்தகைய கதைகள் இடம் பெற்றுள்ளன. சீனர்கள் திங்களிடமிருந்து வந்ததாகச் சீன நாட்டுக் 2. இவ்விடத்தில் சக்பாதியும் சடாயுவும் விண்ணில் கதிரவன் நோக்கிப் பதக்க கதையினையும் சம்பாதிக்கு கேரிட்ட கதியையும்