பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணிகரமான கனவு 祭 கற்பனைக் கதைத் தலைவனும் பல துணிகரச் செயல்களேப் புரிகின்ருன். அவன் அன்னப் பறவைகளைப் பழக்கித் தனது தேரில் பூட்டி விண்வெளியில் சஞ்சரிக்கின்ருன். அப் பறவைகள் அவனைத் தேருடன் திங்கள் மண்டலத்தில் "கொண்டு சேர்க்கின்றன. இந்தப் பயணம் முடியப் பன்னிரண்டு நாட்களாகின்றன. இந்தச் செலவின்பொழுது கதைத் தலைவனுக்கு நிறையே இல்லாத ஒருணர்ச்சி ஏற்படுகின்றது. திங்கள்மண்டலத்தில் புவியீர்ப்பு ஆற்றல் குறைவாக இருப் பதையும் கதைத் தலைவன் உணர்கின்ருன். 'ஒரு மனிதன் தன்னுடைய ஆற்றலையெல்லாம் திரட்டிப் பூமியினின்றும் 18 அல்லது 18 மீட்டர் உயரக் கிளம்பிவிட்டால் திங்களின் ஈர்ப்புவிசையினைக் கடந்துவிடலாம்' என்று நூலாசிரியர் விவரிக்கின் ருர்." காட்வின் பாதிரியார் தமது புதினத்தை எழுதிய அதே யாண்டில் (கி. பி. 1638இல்) ஜான்வில்க்கின்ஸ் புத்துலகக் கண்டுபிடிப்பு” என்ற தமது நூலில் வான்மதிச் செலவை வருணிக்கின்ருர், திங்கள் மண்டலத்தின் இயற்கை யமைப்பு, சூழ்நிலைகள் இந்நூலில் காணப்பெறுகின்றன. அங்கு உயிர்ப் பிராணிகள் இருத்தல் கூடும் என்ற எண்ணத்திற்குப் பக்க பலமான கருத்துகளேயும் தெரிவிக்கின்ருர் ஆசிரியர். மனிதன் பறக்கும் ஊர்தி (Flying chariot) ஒன்றினை அமைத்து அதில் பயணித்துத் திங்கள் மண்டலத்தை அடைந்து அங்குக் குடி யேறலாம் என்ற கருத்துக்கு அவர் அரண் அளித்துள்ளார். மேற்கூறிய நூல்களின் அடிப்படையில் வேறு பல நூல்கள் தோன்றின. கி. பி. 1856இல் சைரனுே (Cyrano) என்ற ஃபிரெஞ்சு ஆசிரியர் படைத்த "திங்கன் கதிரவ மண்டலங் களின் பயணம்' என்ற புதினத்தில் பயணம் தொடங்குவதற்கு இராக்கெட்டின் துனை இன்றியமையாதது என்று முதன் ,ே சர் ஐசாக்கியூட்டன் புவியீர்ப்பு விசையைத் தெளிவுபடுத்து வதற்குச் சுமார் 50 ஆண்டுகட்குமுன்பே இவ்வாசிரியர் அவ்வாற்றலேக் கு கீப்பிடுவது ஈண்டு சினேவுகூரத்தக்கது.